சென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்தது போல நகரின் பல பகுதிகளில் தூறிய மழையால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
சென்னை: ஓஹோ மேகம் வந்ததே என்று ஜாலியாக பாடத் தொடங்கிவிட்டனர் சென்னைவாசிகள். திடீரென பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது அவ்வப்போது வெயிலும் சுட்டெரித்து வருகிறது.

சென்னையில் வெப்பசலனம் காரணமாக, எழும்பூர், அண்ணா சாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், திநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கணித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதிவரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்திருந்தது.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது போல இன்று திடீரென சாரல் மழை பெய்தது.
சென்னையில் வெப்பசலனம் காரணமாக, எழும்பூர், அண்ணா சாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், திநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications