சோழிங்கநல்லூர் டூ துரைப்பாக்கம் போக 2 மணி நேரம் ஆச்சு.. பயத்தை காட்டிய சென்னை ஓஎம்ஆர் சாலை.. வீடியோ
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கனமழை காரணமாக தண்ணீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது. ஒரு பக்கம் மழை, மறுபக்கம் வெள்ள நீர் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூரில் இருந்து சென்னை ஒன் ஐடி பார்க் செல்ல இரண்டு மணி நேரம் ஆகிவிட்டதாக வாகன ஓட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ( ராஜீவ்காந்தி சாலை) கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் இன்று காலை மிகவும் அவதி அடைந்தனர். சென்னையில் பொதுவாக மழை பெய்தாலே சாலைகளில் செல்வோர் சிரமத்தை சந்திப்பார்கள். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகளின் நிலை மோசமடைந்துள்ளது. தண்ணீரும் பல இடங்களில் செல்ல வழி இல்லாமல் அடைத்து கொண்டு நிற்கிறது.

இப்படியான சூழலில், அதுவும் காலை வேளையில் கனமழை பெய்தால் எப்படி இருக்கும். இன்று அப்படியான ஒரு நெருக்கடி தான் சென்னை முழுவதும் ஏற்பட்டது. வெறும் இரண்டு கிமீ தூரம் பயணிக்கவே 45 நிமிடங்கள் வரை பலருக்கும் ஆனது. பெரிய நிறுவனங்கள் அதிகம் உள்ள தென் சென்னை பகுதி முழுவதுமே வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.
குறிப்பாக சென்னை ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, குரோம்பேட்டை பல்லாவரம் ரேடியல் சாலை, வேளச்சேரி மேடவாக்கம் பிரதான சாலை, சென்னை ஓஎம்ஆர் சாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கிண்டி தரமணி சாலை, கிண்டி கோயம்பேடு சாலை என எல்லா சாலைகளுமே போக்குவரத்து நெரிசால் திணறின. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது, சாலைகளில் திடீரென உருவான பள்ளங்கள் காரணமாக வாகன ஓட்டிகளால் வேகமாக சாலைகளில் பயணிக்க முடியவில்லை. இதனால் அலுவலகங்கள் செல்வோர் இன்று காலை கடும் சிரமத்துடனேயே பயணித்தனர்.
இதனிடையே ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள சென்னை ஓஎம்ஆர் சாலையில் பொதுவாகவே காலை மற்றும் மாலை வேளைகளில் அதாவது பீக் அவர்ஸில் போக்குவரத்து நெரிசல் எக்குத்தப்பாக இருக்கும். இந்த நிலையில் இன்று காலை பெய்த மழை மற்றும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் மிக சிறியதாகவே பல கிமீ தூரம் ஓஎம்ஆர் சாலையில் இருக்கிறது. இதுஒருபுறம் எனில், வாகனங்கள் யூடர்ன் எடுக்க வேண்டிய இடங்களிலும் நீண்ட தூரத்திற்கு ஒன்று என்கிற அளவிலேயே இருந்ததால் இன்று ஓஎம்ஆர் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மிகவும் நொந்து போனார்கள்.

இன்று காலை மழைக்கு நடுவில், சென்னை சோழிங்நல்லூரில் இருந்து துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் ஐடி பார்க் செல்ல இரண்டு மணி நேரம் ஆகி உள்ளது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். வெறும் 6 கிமீ தூரத்தை கடக்க 2 மணி நேரம் என்றால் எநத அளவிற்கு வாகன நெரிசல் இருந்தது என்பதை பாருங்கள். வாகன நெரிசலுடன் தான் அவதிப்பட்டதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
OMR #ChennaiRains ⛈️
— Thirukumaran R (@ThiruHR) November 29, 2023
Took 2 hours to cross Shollinganallur junction from Chennai One IT Park. @ChennaiRains pic.twitter.com/lBFPRFXokO












Click it and Unblock the Notifications