Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு தில்ல பாத்தீங்களா! போலீஸ் பெயரில் போலி ட்விட்டர்! ஆர்சிபி ரசிகர் கைது! காரணம் தான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் மாநகர போலீஸ் பெயரை போல் ட்விட்டரில் போலியாக அக்கவுண்ட் ஓபன் செய்து ஐபிஎல்லில் பிற அணி நிர்வாகம் மற்றும் வீரர்களை அலறவைத்த சென்னையை சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவரும், தீவிரமான ஆர்சிபி ரசிகரையு போலீசார் அதிரடியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறிய தகவல் தான் போலீசாரையே அதிர வைத்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்து லீக் சுற்றில் வெளியேறியது.

Chennai RCB fan arrested after creates twitter account in police name for Ridiculing IPL teams

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ‛இ சாலா கப் நம்தே' என உற்சாகமாக கூறும் ஆர்சிபி ரசிகர்களுக்கு வருடந்தோறும் ஏமாற்றமே கிடைக்கிறது. அதோடு பிற அணி ரசிகர்களால் ஆர்சிபி ரசிகர்கள் அதிகமாக கேலி, கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இணையதளங்களிலும் மீம்ஸ்கள் ஏராளாமாக உலவும்.

ஆனாலும் ஆர்சிபி ரசிகர்கள் மனம் தளர்வதே இல்லை. இந்த சீசன் போனால் என்ன? அடுத்த சீசனில் நாங்கள் தான் சாம்பியன் ஆவோம் என்ற ஆவலில், ‛‛முந்தினசாலா கப் நம்தே'' என டயலாக்கை மாற்றி கொண்டு ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஐபிஎல்லில் பிற அணி ரசிகர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் வகையில் தீவிரமான ஆர்சிபி ரசிகரான சென்னையை சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் செய்த சம்பவம் அவரை தற்போது போலீசில் சிக்க வைத்துள்ளது.

அவர் யார்? எதற்காக போலீசார் அவரை கைது செய்தனர்? என்பதுபற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: அதாவது பெங்களூரில் மாநகர போலீசார் ட்விட்டரில் கணக்கு (twitter.com/Blorecitypolice) வைத்துள்ளனர். பொதுமக்கள் யாராவது பிரச்சனையில் சிக்கி கொண்டால் ட்விட்டர் மூலம் போலீசில் புகார் அளிக்க இந்த வசதி உள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களையும் போலீசார் உடனே மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெங்களூர் மாநகர போலீசாரை போல் கூடுதலாக ஒரு எழுத்து சேர்த்து போலி பெயரில் (twitter.com/Blorecitypolicee) ட்விட்டரில்ஒரு அக்கவுண்ட் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த அக்கவுண்ட்டில் கிரிக்கெட் ஸ்கோர், ஐபிஎல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெங்களூர் போலீசார் அறிந்தனர். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து போலி அக்கவுண்ட்டை உருவாக்கிய நபரை தீவிரமாக தேடிவந்தனர்.

Chennai RCB fan arrested after creates twitter account in police name for Ridiculing IPL teams

போலீஸ் விசாரணையில் பெங்களூர் போலீஸ் பெயரில் ட்விட்டரில் போலி அக்கவுண்ட்டை உருவாக்கிய நபர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் போலீசார் சென்னை வந்து சேத்துபேட்டையை சேர்ந்த 19 வயது நிரம்பிய மகேஷ் குமார் என்பதை கைது செய்தனர். மகேஷ் குமார் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பை படித்து வரும் நிலையில் அவரிடம் பெங்களூர் போலீஸ் பெயரில் போலியாக ட்விட்டரில் கணக்கு தொடங்கி கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை வழங்கியது ஏன்? என போலீசார் விசாரித்தனர்.

அப்போது தான் மகேஷ் குமார் சொன்ன தகவல் திடுக்கிட வைத்துள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛கைது செய்யப்பட்ட மகேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர் ஐபிஎல்லில் தீவிரமான ஆர்சிபி ரசிகர் என்பது தெரியவந்தது. மேலும் ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் நபர்களையும், ஆர்சிபியை தோற்கடிக்கும் அணியையும் அவர் கிண்டல் செய்ய வேண்டும் என பெங்களூர் போலீஸ் பெயரில் போலியாக ட்விட்டரில் கணக்கு தொடங்கியது தெரியவந்தது.

இதன்மூலம் தன்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் என அவர் நினைத்து ஐபிஎல் வேளையில் போலியாக ட்விட்டர் கணக்கை திறந்து ஸ்கோர் விபரம் மற்றும் பிற அணிகளை கிண்டல் செய்து பதிவிட்டு வந்துள்ளது. இப்படி போலீசார் பயன்படுத்தும் ட்விட்டர் கணக்கின் பெயரில் போலியாக அக்கவுண்ட் ஓபன் செய்வது என்பது குற்றம் என்பது அவருக்கு தெரியவில்லை. இதையடுத்து அவரது போலியாக ட்விட்டர் அக்கவுண்ட்டை டெலிட் செய்துள்ளோம். இதையடுத்து போலீஸ் அழைக்கும்போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் வழங்கி அவரை அனுப்பி வைத்தோம்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+