சென்னையில் கண்ணை மூடிக்கிட்டு.. இந்த 3 இடத்தில் நிலம் வாங்கி போடுங்க.. 5 மடங்கு உயரப்போகும் விலை
சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் பின்வரும் பகுதிகளில் நிலங்களின் மதிப்பு வரும் நாட்களில் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டுமானங்கள், மெட்ரோ பணிகள் காரணமாக நிலத்தின் மதிப்பு வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி பின்வரும் பகுதிகளில் இப்போது நிலம் வாங்கினால் வரும் நாட்களில் அது பெரிய அளவில் லாபம் தரும். அடுத்த 20 ஆண்டுகளில் இங்கே விலை 5 மடங்கு உயரப்போவதாக தகவல்கள் வருகின்றன.

1. வண்டலூர் - செங்கல்பட்டு ஸ்ட்ரெச் முழுக்க நிலத்தின் மதிப்பு உயரும்.
2. ஆவடி - பட்டாபிராம் ஏரியாவில் நிலத்தின் மதிப்பு உயரும்.
3. பரந்தூர் செல்லும் ஸ்ட்ரெச் முழுக்க நிலத்தின் மதிப்பு உயரும்.
காரணங்கள்: இந்த 3 ஸ்ட்ரெச்சில் நிலத்தின் மதிப்பு உயருவதற்கு பின் முக்கியமான பல காரணங்கள் உள்ளன.
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காரணமாக வண்டலூர் - செங்கல்பட்டு ஸ்ட்ரெச் முழுக்க உள்ள நிலத்தின் மதிப்பு உயரும். கோயம்பேட்டை சுற்றி நிலத்தின் மதிப்பு உயர்ந்தது போல இங்கேயும் மதிப்பு உயரும் வாய்ப்புகள் உள்ளன.
2. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கோயம்பேடு முதல் ஆவடி வரை முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை பட்டாபிராம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்மொழியப்பட்ட இந்த நீட்டிப்பு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நகரின் புறநகர் பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு பட்டாபிராம் பகுதியில் வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பட்டாபிராமில் ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தியக்கூறு ஆய்வு வெற்றி பெற்றால், ஒரு மாதத்திற்குள் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதனால் அங்கும் மதிப்பு உயரும்.
3. பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டம் தீவிரமாக முன்னேறி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ரீதியாக டிபிஆர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் தோற்றம் சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாக உள்ளது. சமன்படுத்தப்ட்ட நிலங்களின் தோற்றம் இதில் காணப்பட்டு உள்ளது. இதன் அருகிலேயே ஒரு கோடு போன்ற அமைப்பு உள்ளது. அதுதான் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே ஆகும். பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் அடுத்த வருடம் திறக்கப்படும் சாலை இதன் வழியேதான் வர உள்ளது.
சமீபத்தில் வெளியான டிபிஆர் அறிக்கையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 2029 இல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையின்படி, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2026 இல் தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும் . இதனால் அங்கும் மதிப்பு உயரும் வாய்ப்புகள் உள்ளன.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications