சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு- இன்று 1,140 பேருக்கு கொரோனா; 24 பேர் மரணம்
சென்னை: கொரோனா உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்திய சென்னையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 1,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்திய அளவில் தமிழகம்தான் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னைதான் மிக மோசமான பாதிப்பையும் மரணங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனாவின் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மிகவும் ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. அதேபோல் சென்னையில் கொரோனா மரணங்களும் குறைந்து வருகின்றன.
சென்னையில் இன்று 1,140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்தது. சென்னையில் இன்று 24 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 1,277 ஆகவும் அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 337 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 219 பேருக்கும் கொரோனா உறுதியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 352 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டில் 7 பேரும் திருவள்ளூரில் 2 பேரும் காஞ்சிபுரத்தில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8283. காஞ்சிபுரத்தில் 3979; திருவள்ளூரில் 6930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications