செங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் திருதிருன்னு துர்கா.. சென்னை ராஜ் எங்கே போனார்? CM விஜய் அவ்ளோ சொல்லியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், சட்டவிரோத கடத்தல்கள் தொடர்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான், செங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.. அவர் தந்த வாக்குமூலம் அதற்கு மேல் பரபரப்பை தந்து வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கில், முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார்.. சமீபத்தில்கூட, சென்னை மாநிலக் கல்லூரியில் "போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி, உறுதிமொழியையும் முன்மொழிந்திருந்தார்.

Chennai Red Hills Red Hills Bus Stand Durga Auto Driver Raj

போதைப்பொருள் ஒழிப்பு

அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி, பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்து, அரசு இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் தராது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருந்தார்.

இப்படி முதலமைச்சரும் தமிழக அரசும் போதைப்பொருள் இல்லாத மாநிலத்தை உருவாக்க முழு வீச்சில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் இதே சூழலில், சட்டத்தையும் காவல்துறையையும் துளியும் மதிக்காமல் மீண்டும் சென்னையில் போதை மாத்திரைகளுடன் ஒரு பெண் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் பேருந்து நிலையம்

சென்னையை அடுத்த புழல் பகுதிக்குட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் இன்று காலை வழக்கமான தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பஸ் ஸ்டாண்டு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு பெண் தனது கைகளில் இரண்டு பெரிய பைகளுடன் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தார். அவரின் பதற்றமான நிலையை உற்று நோக்கிய காவல்துறையினர், உடனடியாக அந்த பெண்ணை இடைமறித்து அவரிடம் இருந்த பைகளை வாங்கி சோதனை செய்தார்கள்.

துர்கா கக்கிய உண்மை

அப்போது பைகளுக்குள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 1,500 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அவை அனைத்தையும் போலீசார் உடனடியாகக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று நடத்திய தீவிர விசாரணையில், அவர் சென்னை பெரம்பூர், சோமசுந்தரம் 2-வது தெருவை சேர்ந்த துர்கா (33) என்பது தெரியவந்தது. இந்த போதை மாத்திரைகளை அவர் எங்கிருந்து கொண்டு வந்தார் என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.

அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. துர்கா இந்த மாத்திரைகளை மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக கடத்தி வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ஆண் நண்பரான ஆட்டோ டிரைவர் ராஜி (32) என்பவர் சொன்னதால்தான், மும்பை சென்று இவைகளை வாங்கி வந்ததாகவும், அவரிடம் ஒப்படைப்பதற்காகவே இந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருந்ததாகவும் துர்கா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து துர்காவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு ஜெயிலில் அடைத்தனர்.

யார் அந்த ஆட்டோ ராஜி

அப்போதுதான் துர்கா சொன்ன, ஆட்டோ டிரைவர் ராஜி மீது ஏற்கனவே காவல்துறையில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ராஜி தற்போது தலைமறைவாக உள்ளாராம். அதனால் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது..

அவரைப் பிடித்து விசாரணை நடத்தினால்தான், இந்த போதை மாத்திரைகளை மும்பையில் யார் மூலம் சப்ளை செய்யப்பட்டது, பின்னணியில் இயங்கும் போதைப்பொருள் நெட்வொர்க் எது மற்றும் சென்னையில் இவைகளை யாருக்கெல்லாம் விநியோகம் செய்யத் திட்டமிட்டார்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள் போலீஸார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+