தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. 10 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், கடலூர், நாகப்பட்டிணம், புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜூலை 9ஆம் தேதி கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
