வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று காலையிலிருந்தே வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கு செலுத்த துவங்கிவிட்டனர்..

தற்போது கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. ஆங்காங்கே மழை பெய்தாலும், பல்வேறு மாவட்டங்களில் வெயில் மண்டையை பிளக்கிறது.. எனவே, பொதுமக்கள் வெளியில் நடமாட்டத்தை குறைத்துள்ளதால், சமீப நாட்களாகவே, பகல் நேரங்களில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Chennai roads are deserted due to heat degree scorching and Lok Sabha Elections 2024 Polling

இந்நிலையில், தேர்தல் நாளில் வெப்ப அலை அதிகமாகவே வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது... தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்துள்ளது..

ஓட்டுப்போட வேண்டும்: வெயில் வருவதற்கு முன்பேயே, ஓட்டுப்போட்டு விட வேண்டும் என்பதற்காக, ஏராளமானோர் காலை முதலே வாக்குகளை செலுத்த குவிய தொடங்கிவிட்டனர். இதனால், காலை 10 மணிக்குள்ளேயே பெரும்பாலானோர் வாக்குகளை செலுத்திவிட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. இதன்காரணமாகவும், பகல் நேரங்களில் சாலைகள் எல்லாமே வெறிச்சோடி காணப்பட்டன.

அதுவும் இல்லாமல், சொந்த ஊர்களில் வாக்களிப்பதற்காக, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றுவிட்டார்கள்.. இதனாலும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வாக்குப்பதிவு: அதைவிட முக்கியமாக, அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைகள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை அனைத்துமே விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வழக்கமாக தேர்தல் நாளிலும், இயல்பான மக்கள் நடமாட்டமே சாலைகளில் காணப்படும். ஆனால், இன்றைய தேர்தலில் கடும் வெயில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு போன்ற காரணங்களினால் மக்கள் நடமாட்டமோ, வாகன நெரிசலோ சென்னை சாலைகளில் காணப்படவில்லை.

வெறிச்சோடி:
சாலைகள்தான் வெறிச்சோடியிருக்கிறது என்றால், சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததால், சென்னையின் 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளதாம்..

வெயில் கொளுத்தியதால், சென்னை மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.. குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாகியிருக்கும் 3 தொகுதிகளும் சென்னைக்கு உள்பட்ட மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை தொகுதிகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+