"கிரைம்" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த "அம்மு"!
இட்லியில் விஷம் தந்த ரவுடியை கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: "சுரேஷ் என்னை விடவே இல்லை.. தகராறு செய்த பிறகும் ஜாலியாக இருக்கலாம் வா.. வா.. என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தான்.. அதான் போட்டு தள்ளிவிட்டோம்" என்று கள்ள உறவு கார்த்திகா தெரிவித்துள்ளார்.
சென்னை ரெட்டேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பட்ட பெயர் கிரைம் சுரேஷ். 31 வயதுதான்.. ஏகப்பட்ட கேஸ்கள் சுரேஷ் மீது உள்ளது. கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
போன 14-ம் தேதி வேலைக்கு போன சுரேஷ், வீடு திரும்பவில்லை. அதனால், கடந்த 18ம் தேதி சுரேஷின் அம்மா கொரட்டூர் போலீசில் புகார் தந்தார். இதன்பேரில் போலீசாரும் சுரேஷை தேடி வந்தனர்.

அம்மு
அதன்படி நேற்று சுரேஷின் சடலம் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதி முட்புதரில் வீசப்பட்டது கண்டெடுக்கப்பட்டது. ஆனால் தலையை காணவில்லை. இதனால் போலீசார் இது சம்பந்தமான விசாரணையில், ஜெயக்கொடி - அவரது மனைவி கார்த்திகாவை கைது செய்து விசாரித்தனர். கார்த்திகாவை எல்லாரும் அம்மு என்றுதான் கூப்பிடுவார்களாம். அப்போது போலீசில் சொன்ன வாக்குமூலம்:

இட்லி கடை
"எனக்கு 31 வயதாகிறது.. பாடி, குமரன் நகர் நகர் டாஸ்மாக் கடை அருகே இட்லி கடை நடத்தி வருகிறேன்.. இந்த கடைக்கு கிரைம் சுரேஷ் வந்து டிபன் சாப்பிடும்போது, எங்களுக்குள் கள்ளக்காதல் வளர்ந்தது. வீட்டுக்கு சுரேஷ் அடிக்கடி வந்து என்னுடன் ஜாலியாக இருந்துள்ளார். இருந்தாலும் சுரேஷூடன் என் உறவை துண்டிக்க நினைத்தேன்.. இதற்கு சுரேஷ் சம்மதிக்கவில்லை.

உல்லாசம்
போன 14-ம் தேதி கடைக்கு சாப்பிட வந்தார். கடைக்கு வந்த ஒருத்தருடன் நான் சிரித்து சிரித்து பேசவும் சுரேஷூக்கு எரிச்சலை தந்தது. அதனால் கடையிலேயே தகராறு செய்தார். சண்டை போட்டார். அதனால் நான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றேன். ஆனால் பின்னாடியே வந்த சுரேஷ் என்னை உல்லாசத்திற்கு கூப்பிட்டார். நான் மறுத்தேன்..அதற்கு என்னை சரமாரி அடித்துவிட்டார்.. "உன்னை விட மாட்டேன்" என்று சொல்லி விட்டு போனார்.

மயக்க மருந்து
நான் என் கணவரிடம் சுரேஷ் கடைக்கு வந்து மிரட்டுகிறான் என்று சொன்னேன். இதனால் ஆத்திரம் அடைந்த என் கணவர், பேச வேண்டும் என்று சுரேஷை வீட்டுக்கு வரவழைக்க சொன்னார். நானும் அன்று இரவே வரவழைத்தேன். மயக்க மருந்து கலந்த இட்லியை நான் தந்தும், சுரேஷ அதை வாங்கி சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து என் கணவர் சடலத்தை காரில் ஏற்றி கொண்டு போய் நண்பர்கள் ராஜா, சுந்தரகண்டன் உதவியுடன் கொலை செய்து, உடல் வேறு, தலை வேறாக துண்டித்துள்ளனர்.

தலை கிடைத்தது
உடலை அங்கிருந்த முள்ளு செடியில் உடலை போட்டுவிட்டு, தலையை வேறு பக்கம் வீசிவிட்டு வந்து விட்டனர்" என்றார். இப்போது 2-வது நாளாக தீவிரமாக தேடியதில், சுரேஷின் தலை கண்டெடுக்கப்பட்டது. காதலி கார்த்திகா, கணவர் ஜெயக்கொடி, உட்பட கொலை செய்த 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications