பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.5 கோடி கஞ்சா பொருள்.. வைத்து சென்றது யார்?
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கஞ்சா பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வந்தது யார்? ரயில் நிலையத்தில் விட்டு சென்றது ஏன்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பல்வேறு இடங்களிள் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க.. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

அதே நேரத்தில் சட்ட விரோதமாக பணம் பெரிய அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் எதுவும் எடுத்து செல்லப்படுகிறதா? என முக்கியமான இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கியுள்ளது. ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை போலீசார் திறந்து பார்த்தனர். இதில் ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்ச இருந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த கஞ்சா பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வந்தது யார்? ரயில் நிலையத்தில் விட்டு சென்றது ஏன்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ரயில் வழியாக இந்த கஞ்சா கொண்டு வரப்பட்டு இருக்கலம் எனவும், போலீசாரின் சோதனைக்கு அஞ்சி ரயில் நிலையத்திலேயே கடத்தல்காரரக்ள் விட்டு சென்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தலைநகர் சென்னையில் 5 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருள் சிக்கியது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக போதை பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுகின்றன. இந்த சூழலில்தன் பெரிய தொகை மதிப்பிலான கஞ்சா சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications