Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ செங்கல்பட்டு.. வெறும் 15 நிமிடம்.. காரில் போற செலவில் சற்றே அதிகம்.. இனி வானில் பறக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைச் சேர்ந்த 'தி ஈ-பிளேன் கம்பெனி' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 'e200x' என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது. இது சாலைப் போக்குவரத்தில் சிக்காமல், வானத்திலேயே பறந்து சென்று மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும். இதற்கு என்விடியா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல எடுக்கும் 2 மணி நேரப் பயணம் வெறும் 15 நிமிடங்களாகக் குறையும்.

சென்னையைச் சேர்ந்த 'தி ஈ-பிளேன் கம்பெனி' உருவாக்கி வரும் இந்த e200x ஏர் டாக்ஸியை பற்றி பார்க்கும் முன்பு, அந்த நிறுவனம் ஏர் டாக்ஸியை பறக்க வைக்க பயன்படுத்தும் என்விடியா தொழில்நுட்பம் பற்றி பார்ப்போம். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா-வுடன் இவர்கள் கைகோர்த்துள்ளனர். இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.

A 2-hour journey in Chennai is just 15 minutes India s first air taxi called e200x

டிஜிட்டல் ட்வின்

நிஜமாக ஒரு விமானத்தைச் செய்து அதை ஓட்டிப் பார்ப்பதற்கு முன்னால், கணினியிலேயே அந்த விமானத்தைப் போன்றே ஒரு "டிஜிட்டல் நகலை" உருவாக்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் விமானத்தை வைத்து, பல கோடி கிலோமீட்டர் தூரம் பறக்கவிட்டுச் சோதனை செய்கிறார்கள். பலத்த காற்று, மழை அல்லது அவசர காலச் சூழல்களில் அந்த விமானம் எப்படிச் செயல்படும் என்பதை நிஜமாகப் பறப்பதற்கு முன்பே கணினியில் துல்லியமாகச் சோதித்துவிட முடியும்.

பாதுகாப்பான பயணம்

இந்த e200x ஏர் டாக்ஸியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் ரேடார்களில் இருந்து வரும் தகவல்களை பிராசசிங் செய்ய என்விடியாவின் அதிவேக கம்ப்யூட்டிங் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வானில் பறக்கும்போது தானாகவே பாதுகாப்பான முடிவுகளை எடுக்க உதவும். இந்தத் தொழில்நுட்பம் வெறும் சோதனையோடு நிற்காமல், விமானத்தின் பாகங்கள் எப்போது பழுதடையும் என்பதைக் கூட முன்கூட்டியே கணித்துச் சொல்லும் . இதனால் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

தி ஈ-பிளேன் கம்பெனியின் முதன்மைப் பொறியாளர் பக்தகோலஹலன் ஷியாம்சுந்தர் கூறும்போது, "இது வெறும் சிமுலேஷன் அல்ல; பாதுகாப்பிற்கான ஒரு கால இயந்திரம் . நிஜ உலகில் ஒருமுறை பறப்பதற்கு முன்பே, டிஜிட்டல் உலகில் இந்த விமானம் ஆயிரம் முறை பறந்து அனைத்துச் சவால்களையும் கற்றுக்கொண்டிருக்கும்" என்றார்.

சென்னையில் தயாராகும் இந்த ஏர் டாக்ஸி, நிஜமாக வானில் ஏறுவதற்கு முன்பே கணினி உலகில் பல கோடி மைல்கள் பறந்து, அனைத்துப் பாதுகாப்புகளையும் உறுதி செய்த பிறகுதான் நம் கைக்கு வரும். இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. இது போன்ற ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல எடுக்கும் 2 மணி நேரப் பயணம் வெறும் 15 நிமிடங்களாகக் குறையும்.


e200x ஏர் டாக்ஸி பற்றிய கூடுதல் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த ஏர் டாக்ஸி நகர்ப்புறங்களில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேகம்: மணிக்கு அதிகபட்சமாக 160 - 200 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

பயணத் தூரம் : ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 110 கி.மீ. வரை பறக்கும்.

சுமை திறன் : 200 கிலோ வரை எடையைத் சுமக்க முடியும் (பொதுவாக 1 பைலட் + 2 பயணிகள்).

அளவு: 8 மீட்டர் x 10 மீட்டர். இது ஒரு சாதாரண கார் நிறுத்தும் இடத்தைப் போல மிகக் குறைவான இடத்தையே ஆக்கிரமிக்கும். எனவே, கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் (Rooftops) இருந்தே எளிதாகக் கிளம்பவும், தரையிறங்கவும் முடியும்.

தனித்துவமான 'சினெர்ஜிஸ்டிக் லிப்ட்'

இந்த விமானம் மற்ற ஹெலிகாப்டர்களில் இருந்து மாறுபட்டது. இதில் eVTOL தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சமே இதன் இறக்கைகள் தான். இது செங்குத்தாக மேலே எழும்பும்போது ஒரு விதமாகவும், காற்றில் வேகமாக முன்னோக்கிப் நகரும்போது ஒரு விதமாகவும் ஆற்றலைச் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10 மோட்டார்கள் (6 செங்குத்து மோட்டார்கள் மற்றும் 4 முன்னோக்கிச் செலுத்தும் மோட்டார்கள்) உள்ளன.

பாதுகாப்பு வசதிகள்

இந்த நிறுவனம் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் பல மோட்டார்கள் இருப்பதால், ஒரு மோட்டார் பழுதடைந்தாலும் மற்ற மோட்டார்கள் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும். ஒருவேளை மிகப்பெரிய அவசரநிலை ஏற்பட்டால், முழு விமானத்தையும் பாதுகாப்பாகத் தரையிறக்க பிரத்யேகப் பாராசூட் வசதி உண்டு. என்விடியா (Nvidia) தொழில்நுட்பம் மூலம், வானில் பறக்கும் மற்ற பொருட்கள் அல்லது தடைகளை இது தானாகவே கண்டறிந்து விலகிச் செல்லும்.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தேவையான முதற்கட்ட அனுமதிகளைப் பெற்றிருக்கிறது. தற்போது இதன் முழு அளவிலான முன்மாதிரி தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், விரைவிலேயே இந்த ஏர் டாக்ஸிகள் வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

பயணச் செலவு எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் இது சற்றே விலை உயர்ந்ததாகத் தெரிந்தாலும், வெகுஜனப் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு உபேர்/ஓலா பிரீமியம் காரில் செல்வதற்கு ஆகும் செலவை விட வெறும் 2 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகரின் முக்கியப் பகுதிக்குச் செல்ல காரில் 2 மணி நேரம் ஆகும் என்றால், இந்த ஏர் டாக்ஸியில் வெறும் 8 முதல் 10 நிமிடங்களில் சென்றுவிட முடியும் என்கிறார்கள். மேலும் தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+