சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு
சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஹோட்டல் ஆனந்தாவில் வெரைட்டி சாதங்கள் கிடைக்காது என அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 சிலிண்டர்களை பயன்படுத்தும் இந்த ஓட்டலில் கடை திறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்புதான் இன்று சிலிண்டர் விநியோகம் இருக்காது என்ற தகவல் கிடைத்ததாக ஹோட்டல் நிர்வாகம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா- இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நிலவி வருகிறது. இதனால் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை எரிந்து நாசமாகியுள்ளன.

ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் எண்ணெய் கப்பல்கள் கொண்டு செல்லும் வழியை தடுத்துள்ளது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், சமையல் கேஸ் எரிவாயுக்களின் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை சொல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, எண்ணெய் நிறுவனங்களை கணக்கெடுத்து 20 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் இருப்பதாக தெரிவித்தன.
அது போல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நேற்று முதல் இந்திய எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இன்று முதல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
கோவையில் ஹோட்டல் அன்னபூர்ணாவில் உணவுகளின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள ஹோட்டல் ஆனந்தாவில் வகைவகையான குருமாக்களும், உணவு வகைகளும் வழங்கப்பட்ட நிலையில் இனி ஒரே குருமா, ஒரே சாம்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் கலவை சாதங்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த ஹோட்டலின் மேற்பார்வையாளர் நாராயணன் கூறியிருப்பதாவது: திடீர்னு 2 மணி நேரத்திற்கு முன்பு சிலிண்டர் கிடைக்காது என சொன்னால் என்ன செய்வது? வெரைட்டி சாதங்கள், குருமா வகைகள், ஆப்பம் உள்ளிட்ட உணவுகளை நிறுத்திவிட்டோம்.
சிலிண்டர் இருந்தால்தானே கொடுக்க முடியும். இந்த நிலைமை சீராகும் வரை பொதுமக்கள், ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லும் என தெரியவில்லை. நாளைக்கும் சிலிண்டர் வராது என்கிறார்கள்.
பொதுவாக எங்கள் ஹோட்டலை காலை 6மணிக்கே திறப்போம். இன்று காலை 7 மணிக்குத்தான் திறந்தோம். ஆப்ப வகைகள், குருமா வகைகள், குழிபணியார வகைகளை எல்லாம் நேற்று முதலே கொடுக்கவில்லை. முன்கூட்டியே அறிவிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நேற்று திடீரென வணிக சிலிண்டர் சப்ளை நிறுத்தப்படுவதாக அறிவித்துவிட்டார்கள். இது எல்லாருக்கும் கஷ்டம். சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்களுக்கும் தெரியும் என்பதால் முடிந்த அளவுக்கு உணவு கொடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் சேமிப்பு இந்தியாவின் 2 நாள் தேவைக்குக் கூடப் போதாது.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications