பழத்தோட்டத்தில் தாத்தா செய்த காரியம்! யாரந்த பரிதாப பெண்? சென்னை சலூன் கடைக்காரரையும் தூக்கிய போலீஸ்
சென்னை: பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே இந்தியாவில் சந்தேகத்துக்கிடமாகி விட்டது. இப்போது , சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதனால் போக்சோவில் கைதாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. நேற்று ஒரேநாளில் 2 முதியவர்கள் போக்சோவில் கைதாகி உள்ளனர். என்ன நடந்தது?
இந்தியாவை பொறுத்தவரை, குழந்தைகளின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன. அதுபோலவே பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணையாய் நிற்கின்றன..

பெண் குழந்தைகள்
என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் வருத்தத்துடன் கூறியிருப்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதிலும் கடந்த 5 வருடங்களை காட்டிலும் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.
நேற்று ஒரே நாளில் சென்னை, ஆந்திர மாநிலத்தில் நடந்த பாலியல் கொடூரமானது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
சலூன் கடைக்காரர்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர குமார். இவருக்கு 41 வயதாகிறது.. இவர் சென்னை மந்தைவெளியில் உள்ள சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் 6 வயது சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்டு, பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மயிலாப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் உபேந்திரா மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் உபேந்திர குமாரை பிடித்து மயிலாப்பூர் மகளிர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் அவரை கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பழத்தோட்டம்
இதேபோல ஆந்திர மாநிலத்திலும் ஒரு துயரம் நடந்துள்ளது.. காக்கிநாடாவில் பல்வேறு அரசு பள்ளிகள் உள்ளன.. இதில் ஒரு அரசுப் பள்ளிக்கென்று ஹாஸ்டல் தனியாக உள்ளது.. சம்பவத்தன்று காலை 11 மணியளவில் டி. நாராயண ராவ் என்ற தாத்தா அங்கிருந்த ஹாஸ்டலுக்கு சென்றுள்ளார்..
அங்கிருந்த ஒரு சிறுமியிடம் நைசாக பேசி தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார்.. ஆள் நடமாட்டமில்லாத ஒரு பழத்தோட்டத்திலேயே அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ காட்சிகள்
சிறுமியை தாத்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் காட்சியானது, பழத்தோட்டத்தின் உரிமையாளராலேயே செல்போனில் வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு, அது சமூக வலைதளங்களிலும் வைரலாகிவிட்டது.
தோட்டத்தின் உரிமையாளர் இதுகுறித்து நேரடியாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், இந்த வீடியோ வைரலானதால் போலீசாரே தானாக முன்வந்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்..
பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் வாக்குமூலத்தை பெற்றனர்.. இறுதியில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்து தாத்தாவை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்,
மைனர் பெண் சம்மதம்
இதுகுறித்து காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிந்து மாதவ் கரிகாபதி பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், "அந்தச் சிறுமி சம்மதத்துடன் முதியவருடன் சென்றிருந்தாலும், சட்டம் ஒரு மைனர் பெண்ணின் சம்மதத்தை சம்மதமாக கருதுவதில்லை. மேலும், அவர் சிறுமியின் பெற்றோரின் சம்மதத்தை பெறவில்லை என்பதால், இது கடத்தல் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றமாகும்" என்றார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications