ஆட்டம், பாட்டத்தோடு அதிரப்போகும் தலைநகர்.. ஒத்திகையே ஓஹோனு இருக்கே! ஆஹா.. ஜன.,13ல் சென்னை சங்கமம்
சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி வரும் 13ம் தேதி சென்னையில் துவங்கி ஜனவரி 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 இடங்களில் 600க்கும் அதிகமான கலைஞர்கள் பங்கேற்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த சென்னையும் அதிரப்போகிறது. இந்நிலையில் தான் தற்போதே நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கிய வீடியோ, போட்டோக்கள் இணைய தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் நாட்டுப்புற கலைகளும், நாட்டுப்புற கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு சமீப காலமாக நாட்டுப்புற கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை உள்ளது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் 'நம்ம ஊரு திருவிழா' என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என சட்டசபையின் மானியக்கோரிக்கையின்போது தமிழ்நாட்டு அரசு தெரிவித்தது.

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா
இந்த ‛நம்ம ஊரு திருவிழா'சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ‛‛சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'' தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் ஜனவரி 13 முதல் 17 ம் தேதி வரை அரசு சார்பில் நடைபெற உள்ளது. இதனை வரும் 13ம் தேதி சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

600 கலைஞர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சி 16 இடங்களில் 60க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. மொத்தம் 600 மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்ட உள்ளனர். பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பாடல்கள் உள்பட தமிழக பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டும் வழக்கம்போல் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். தமிழ்நாட்டின் பல்வேறு வகையான உணவு பொருட்களைக் கொண்ட உணவுத் திருவிழாவும் இடம்பெறுகிறது. மேலும், தமிழ் மக்களின் கதைகளை பேசி பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் இலக்கியத் திருவிழாவும் நடைபெறவிருக்கிறது.

16 இடங்கள் எவை?
சென்னையில் மொத்தம் 16 இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொளத்தூர் ஜவகர் நகர் மாநகராட்சி மைதானம் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா (தெற்கு), அம்பத்தூர் எஸ்வி நகர் டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், அண்ணா நகர் டவர் பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு திடல், தீவுத்திடல், கோயம்போடு ஜெய்நகர் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. மேலும் சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், தி நகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மாநகராட்சி மைாதனம், வளசரவாக்கம் கலைஞர் மைதானம், கேகே நகர் சிவன் பூங்கா, செம்மொழிப்பூங்கா, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை விழா நடைபெற உள்ளது.

ஒத்திகையில் அதிர்ந்த சென்னை
சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பு செய்ய உள்ளார். அதன்பிறகு மாநிலத்தின் பிற இடங்களிலும் ‛நம்ம ஊரு திருவிழா' நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நாட்டுப்புற கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப்புற பாடகர்களான சின்னபொன்னு, இளையராஜா மற்றும் தாரை, தப்பட்டை, பறை இசை கலைஞர்கள், நையாண்டி, உருமி மேள கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பொய்க்கால் ஆட்ட கலைஞர்கள் உள்பட ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் தீவிரமான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அழைப்பு விடுத்த கனிமொழி எம்பி
இந்நிலையில் தான் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி பற்றி திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார். அதன்மூலம் அவர் அனைவரையும் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛கலை பண்பாட்டுத்துறை வழங்கும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஜனவரி 13 முதல் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மாபெரும் துவக்க விழா சென்னை தீவுத்திடலில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது. ஜனவரி 14 ம் தேதி மாலையில் துவக்க விழா நடைபெற உள்ளது. முத்தமிழின் சங்கமத்துக்கு அனைவரும் வருக'' என அழைப்பு விடுத்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications