Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ள அள்ள பயங்கரம்.. கொத்தாக சிக்கிய "விஐபி"? பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய நதியா வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை உலுக்கிய சம்பவத்தில், நதியா என்ற பெண் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார். இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவிலிருக்கும் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விபச்சார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டுக்குள் நுழைந்து அதிரடியாக சோதனையிட்டனர்.

Chennai School Students and T Nagar Nathiya confessed to the Police about plus 2 schoolchildren into prostitution

நதியா: அப்போது நதியா என்ற பெண், 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

தன்னுடைய மகளை வைத்து சக பள்ளி தோழிகளிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதும், 17 வயதேயான மாணவிகளை வயதானவர்கள் பலருடன் பாலியல் உறவுக்கு உட்படுத்தியதும் அம்பலமானது. இந்த பாலியல் தொழில் விவகாரம் குறித்து இன்னொரு வழக்கு விசாரணைக்கு சென்றபோதுதான் அதிகாரிகளுக்கே இதை பற்றி தெரிய வந்துள்ளது.

வாக்குமூலம்: இதையடுத்து, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா என்ற 37 வயது பெண் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம், நதியா அளித்துள்ள வாக்குமூலம் இதுதான்:

"நான் 10ம் வகுப்பு படித்திருக்கிறேன்.. வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி, சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பது தான், என்னுடைய பிரதான தொழில்.. பிறகு, ஸ்மார்ட் போன் மூலமாக விபச்சார தொழில் குறித்து தெரிந்து கொண்டேன்.. மதுபானத்தைவிட, பணம் அதிகம் கிடைக்கும் என்பதால், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன்..

புரோக்கர்: டாக்டர் தாமஸ் சாலையில் வசித்து வரும் என்னுடைய உறவினர்கள் சுமதி, (43), ஜெயஸ்ரீ (43) ஆகியோரையும் இந்த தொழிலில் இணைத்து கொண்டு செயல்பட்டேன்.. எங்களிடம் புரோக்கராக, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், (31) என்பவர் செயல்பட்டார்...

பிளஸ் 2 படித்து வந்த என்னுடைய மகள், தன்னுடன் படிக்கும் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவார். அவர்களின் குடும்ப பின்னணி குறித்து விவாரித்து கொள்வேன்.. ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகள் யார் யாரென்று தெரிந்து, அவர்களுக்கு குறிவைப்பேன்.. அவர்களுக்கு தேவையான டிரஸ்கள், வளையல்கள் போன்றவற்றை கிப்ட் போல வாங்க தருவேன்... தோழியின் அம்மா என்பதால் என்னை அவர்கள் முழுசாக நம்பினார்கள்..

வசூல் பணம்: அவர்களிடம், குடும்ப வறுமையை போக்கி விடலாம் என்று நைசாக பேச்சு கொடுத்து, வீட்டில் தனியாக இருக்கும் விஐபிக்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விருந்தாக்கினேன். அந்த விஐபிகளிடம் 15 - 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.. ஆனால், மாணவிகளுக்கு வெறும் 500 - 1,000 ரூபாய் கொடுப்பேன்.

அடுத்த முறை அழைக்கும்போது சம்மதம் தெரிவிக்காத மாணவிகளை மிரட்ட துவங்குவேன்.. "உன்னுடைய அந்தரங்க வீடியோ, போட்டோக்கள் என்னிடம் இருக்கின்றன.. அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டுவேன்.. அவர்களும் வேறு வழியின்றி பணிந்துவிடுவார்கள்..

கஸ்டமர்கள்: "லைப்ரரியில் புத்தகம் அடுக்கி வைக்கும் வேலைக்கு செல்கிறேன். அதிகாலையில் தான் வீட்டிற்கு வருவேன்" என்றுஅவரவர் வீட்டில் பொய் சொல்லிவிட்டு வருவார்கள். என்னுடைய கட்டுப்பாட்டில் இப்படி பல மாணவிகள் இருந்தனர்.. ஆனால், இதெல்லாம் மாணவியின் பெற்றோருக்கு இதுவரை மகள் என்ன செய்கிறார் என்றுகூட தெரியாது. என்னிடம், 70 வயது நபர்கள் கூட கஸ்டமராக இருக்கிறார்கள்" என்று நதியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லிஸ்ட் தயாராகிறது.. மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை லிஸ்ட் எடுத்து, குழந்தைகள் நல குழுவும் விசாரணையை ரகசியமாக நடத்தி வருகிறது.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலத்தின்படி, பள்ளி மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்தி கொண்ட நபர்கள் லிஸ்ட்டையும், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளார்களாம்.. இதில் பல விஐபிகள் சிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

சாக்லெட்டுகள்: நதியாவை பொறுத்தவரை, அப்பாவி மாணவிகளை குறி வைப்பதற்கு முன்பு, அவர்களிடம் இரக்க சுபாவம் உள்ளது போல காட்டிக் கொள்வாராம். திடீர் திடீரென அந்த மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் தருவாராம்.. விலை உயர்ந்த சாக்லேட்டுகளை தந்து அசரடிப்பாராம்.. பிறகு காஸ்ட்லி டிரஸ்களை வாங்கி தந்துள்ளார்.. சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உயர்தர உணவு சாப்பிட வைத்து, கை நிறைய பாக்கெட் மணியையும் தருவாராம்.

இவைகளை எல்லாம் பார்த்து அந்த மாணவிகள் கிறங்கிவிட்டால், அவர்களை பாலியல் தொழிலுக்கு ஆசைகாட்டி அழைத்து சென்றுவிடுவாராம்.. மிகப்பெரிய பணமுதலைகளும், தொழிலபதிபர்களுக்குமே , மாணவிகளை அனுப்பி வைத்திருக்கிறார் நதியா.

பெரும்பாலும் சோஷியல்மீடியாவிலேயே, பண முதலைகளுக்கு வலை விரித்துள்ளார். இதனால் ஹைதராபாத தவிர, மற்ற இந்திய மாநிலங்களில் உள்ள பணக்காரர்களிடம் மாணவிகளை அனுப்பி வைப்பாரா. வெளி மாநிலம் என்றால், விமானத்திலேயே தன்னுடன் மாணவிகளை நதியா அழைத்து சென்று வருவாராம்.

நதியா: இதனிடையே, தி.நகரைச் சேர்ந்த குடியிருப்பு மேலாளரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். இவர், நதியாவுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவராம்.. தொழிலதிபர்களுக்கு எந்த மாணவியை அனுப்ப வேண்டும், சென்னையில் போலீஸிடம் சிக்காமல் எந்த பகுதியில் ரூம் எடுக்க வேண்டும் என்பது குறித்து நதியாவுக்கு திட்டம் தீட்டி கொடுத்து வந்ததும் இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை 17 பள்ளிச்சிறுமிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாணவிகளை, பாலியல் தொழிலில் தள்ளி அதன்மூலம் வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+