தண்டையார்பேட்டை "பாலத்துக்கு" கீழே யாருங்க அது? நள்ளிரவில் எட்டிப்பார்த்த போலீஸ்.. ஐயோ, "அந்த" காட்சி
சென்னை: சென்னையே அதிர்ந்து போய் கிடக்கிறது.. நள்ளிரவில் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பள்ளி சிறுவர்கள்.. தாக்குதலுக்கு ஆளானவர் ஒரு போலீஸ் அதிகாரி.
சென்னை மூலக்கடை, அண்ணா நகரை சேர்ந்தவர் பாலமுருகன்.. 56 வயதாகிறது.. இவர் ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ரோந்து பணிகள்: நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ரோந்து பணிக்கு கிளம்பினார் எஸ்.ஐ. பாலமுருகன்.. ரோந்து பணி என்பதால், யூனிபார்மில் இல்லாமல், சாதாரண மப்டி உடையில் இருந்திருக்கிறார்.. தன்னுடைய டூவீலரில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது நள்ளிரவு நேரம்.. பாலத்துக்கு கீழே 4 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர்... இந்த நேரத்தில் சின்ன பிள்ளைகள் இங்கே ஏன் நிற்க வேண்டும்? என்று சந்தேகப்பட்டு, அவர்களிடம் சென்று பாலமுருகன் விசாரித்தார்..
அப்போது 4 பிள்ளைகளுமே உளற ஆரம்பித்துள்ளனர்.. எந்த கேள்வி கேட்டாலும், முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி உள்ளனர்.. அப்போதுதான், அந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததை பாலமுருகன் கண்டுபிடித்தார்.
ஆத்திரம்: இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள், திடீரென பாலமுருகனை தங்கள் கைகளாலேயே தாக்கி உள்ளனர்.. பிறகு, கீழே கிடந்த கற்களை எடுத்து, அவர் மீது வீசி தாக்கி உள்ளனர்.. இதில், ஒரு பெரிய கல், பாலமுருகன் கன்னத்திலேயே பட்டுவிட்டது.. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் வலியால் அலறி கத்தினார். அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சுருண்டு விழுந்து கிடந்த அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், பொதுமக்களை பார்த்ததுமே, கஞ்சா போதை சிறுவர்கள் எகிறி தப்பி ஓடிவிட்டார்கள்.. பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம்.. தீவிரமான சிகிச்சை அவருக்கு நடந்து வருகிறது.. வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்று பாலமுருகனுக்கு ஆறுதல் சொன்னார்.

சிசிடிவி ஆய்வு: இதனிடையே, ஆர்கே நகர் போலீஸார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.. அதில் தாக்குதலில் ஈடுபட்ட 4 சிறுவர்களும் அடையாளம் தெரிந்தது.. இவர்கள் 4 பேருமே அதே பகுதியை சேர்ந்தவர்களாம்.. 4 பேருமே, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸார் கைது செய்து, இப்போது விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில், அந்த சிறுவர்களிடம் பாலமுருகன் விசாரிக்க துவங்கும்போதே, ஒருமையில்தான் பாலமுருகனை பேசியிருக்கிறார்கள்.. அப்போது, அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. தொடர்ந்து பாலமுருகன் விசாரிக்கவும், எரிச்சலடைந்த சிறுவர்கள், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்றும் பாராமல், அவரை சுற்றி வளைத்து கற்களால் தாக்கியிருக்கிறார்கள்..
அதிர்ச்சி: படிக்க வேண்டிய சிறுவர்களின் கையில் போதை உள்ளதும், ரோந்து சென்ற எஸ்ஐ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளதும், போலீஸார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications