ஒரே நாளில் 52.. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் முக்கால் பங்கு சென்னைக்குதான்
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் புதிதாக 52 நோயாளிகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொத்த புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், சுமார் 72 சதவீதம் சென்னையிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளது.
Recommended Video
எனவே சென்னையில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 452 உயர்ந்துள்ளது. கோவையில் இன்று புதிதாக 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் புதிதாக ஒருவருக்கும், மதுரையில் புதிதாக நான்கு பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் முறையே, அந்த மாவட்டங்களில் 12 மற்றும் 56 என்ற அளவில் நோயாளிகள் எண்ணிக்கை உள்ளது.
சேலத்தில் 1, தென்காசி 1, திருவண்ணாமலை 1, திருவள்ளூர் 2, விருதுநகர் 1 என புதிதாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக இன்று யாருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஒரு நல்ல செய்தி. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
இன்று மட்டும் 6,426 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. அதில்தான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 72 ஆயிரத்து 403 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications