மழைக்காலம் உஷார்.. இரும்பு ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து சர்வர் உயிரிழப்பு.. சென்னையில் பரிதாபம்
சென்னை: சென்னையில் ஓட்டல் ஒன்றில் இரும்பு ஷட்டரில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கு சர்வராக வேலை செய்து வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலம் என்பதால் கடந்த ஒரு வாரத்திலேயே இதுபோல இரும்புப் பொருட்கள் மூலம் மின்சாரம் பாய்ந்து 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் சில பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

மின் கசிவு ஆபத்து..
பொதுவாக, மழைக்காலத்தில் பல்வேறு வழிகளில் ஆபத்துகள் நம்மை தேடி வரும். வீடுகள் இடிந்து விழுவது, இடி - மின்னல் தாக்குவது போன்ற சம்பவங்கள் மழைக்காலத்தில் அதிகம் நிகழும். இதில் மிக முக்கியமாக, மின்சாரம் தாக்கி உயிரிழப்பது மழைக்காலங்களில் மிகவும் வழக்கமாக நடைபெறும் ஒரு விபத்து ஆகும். ஏனெனில், மழை அதிகம் இருப்பதால் மின் கசிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அந்த சமயத்தில், ஈரமான சுவர், பக்கத்தில் உள்ள இரும்புப் பொருட்கள் ஆகியவற்றில் மின்சாரம் பாயும். ஆதலால், மழைக்காலங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

தொடரும் இரும்பு கேட் மரணங்கள்..
தமிழகத்தில் பல பகுதிகளில் இதுபோன்ற மின்சாரம் தாக்கி மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு கூட சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டு இரும்பு கேட்டை பூட்டச் சென்ற வயதான தம்பதியர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, மன்னார்க்குடியில் கோயில் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் பலியானார். இந்நிலையில், சென்னையில் இதுபோன்ற ஒரு பரிதாப சம்பவம் நேற்று நடந்துள்ளது.

இரும்பு ஷட்டரில்..
சென்னை தியாகராய நகரில் உள்ள நாயர் தெருவில் பெருமாள் செட்டிநாடு உணவகம் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (27) என்பவர் நேற்றுதான் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில், மதியம் ஓட்டலில் உணவு அருந்திக் கொண்டவர்களுக்கு பாபு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அப்பளம் தீர்ந்து போனதால், அப்பளத்தை எடுக்க கிச்சனுக்கு பக்கத்தில் இருந்த இரும்பு ஷட்டரை அவர் தொட்டார். இதில் அடுத்த நொடியே அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

ஒரே வாரத்தில் 2 ஊழியர்கள் பலி..
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே பாபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், பாபுவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஒர வாரத்தில் மட்டும் இந்த ஓட்டலில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications