இங்கிலீஷ் டீச்சர்.. "அசிங்கமா" சிக்கிட்டாங்க.. யாரந்த சோஷிங்கநல்லூர் "மைனர்".. கோவை போலீஸ் அசால்ட்
சென்னை: பாலியல் சேட்டைகளில் ஈடுபடும், "காமப்பேர்வழிகள்" போக்சோவில் கைதாவது தொடர்கதையாகிவிட்டது.. ஆனால், போக்சோவில், பெண்களே கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், பிள்ளைகளை வழிநடத்தக்கூடிய ஒரு டீச்சரே கைதாகியிருப்பது, அதைவிட கேவலமாக இருக்கிறது.
கேளம்பாக்கம் அடுத்துள்ளது பொன்மார் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த மாணவர்.. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல ஸ்கூலுக்கு போனார்.. ஆனால், ஸ்கூல் முடிந்து, அந்த மாணவன் தன்னுடைய வீட்டுக்கு வரவில்லை.

மாணவன் மாயம்: இதனால், பதறிப்போன பெற்றோர், மகனை எங்கெங்கோ தேடிப்பார்த்தனர்.. எங்கேயுமே மகன் கிடைக்காததால், நேராக தாழம்பூர் போலீசுக்கு சென்று புகார் தந்தனர். போலீசாரும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர்....
மற்றொருபக்கம், மாணவனை பற்றின விசாரணையிலும் இறங்கினர். அப்போது தன்னுடைய பள்ளியின் ஆங்கில ஆசிரியையுடன் மாணவனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. அதனால், டீச்சரை விசாரிக்க முயன்றபோது, அவர் ஒன்றரை மாதத்திற்கு முன்புதான், வேலையை விட்டு நின்று கோயம்புத்தூருக்கு போய்விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், போலீசார் அந்த டீச்சரின் செல்போன் நம்பரை ஆராய்ந்தபோது, அவர் கோயம்புத்தூரில் இருப்பது உறுதியானது.
மேட்டுப்பாளையம் : உடனே கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு, அந்த டீச்சர் தங்கியிருந்த இடத்தை சோதனை செய்தனர்.. அப்போதுதான், காணாமல் போன மாணவனும், இந்த டீச்சருடன் தங்கியிருப்பது தெரியவந்தது.. பின்னர், 2 பேரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல தகவல்களை வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.
அதாவது, இந்த டீச்சர் கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவராம்.. பெயர் எப்சிபா.. 28 வயதாகிறது.. இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018ல் கணவரை பிரிந்து வந்துவிட்டார்.. மதுராந்தகம் அருகே ஒரத்தி பகுதியில் வேலை செய்து வந்திருக்கிறார்.. ஆனால், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்..
ராஜினாமா: பிறகு, கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துள்ளார். அப்போதுதான், பள்ளியில் படிக்கும் மாணவனுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மாணவனுடன் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லையாம். சாதாரணமாகத்தான் பழகி வந்துள்ளார்.. இதற்கு பிறகு, தனக்கு தேவையான பொருட்களை அடிக்கடி வாங்கி வரும்படி மாணவரிடம் சொல்வாராம். பிறகு, தான் தங்கியிருந்த ரூமுக்கு மாணவனை அழைத்து சென்றாராம்.. அப்படி ஒருநாள் ரூமுக்கு அழைத்து சென்றபோது, டீச்சரிடம் அந்த மாணவன்தான் அத்துமீறி நடந்து கொண்டானாம்..
டீச்சர்: இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று நினைத்து, வேலையையும் ராஜினாமா செய்து விட்டு கோயம்புத்தூர் சென்றுவிட்டாராம் டீச்சர். ஆனால், டீச்சரை விட்டு மாணவனால் இருக்க முடியாததால், கோயம்புத்தூருக்கே தேடி வந்துவிட்டதாகவும், தன்னை விட்டு பிரிந்து போனால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மாணவன் மிரட்டியதாகவும், அதனால்தான், வேறு வழியின்றி அவனுடன் தங்கி இருந்ததாகவும், டீச்சர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆசிரியையுடன் இருந்த மாணவன் மைனர் என்பதால், இந்த வழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டீச்சரை கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.
ஒரே க்ளூ: இந்த சம்பவத்தில், ஒரே ஒரு போன் அழைப்புதான் போலீசாருக்கு துருப்பு சீட்டாக இருந்திருக்கிறது.. மாணவனை கோவைக்கு அழைத்து வந்த பிறகு, கிட்டத்தட்ட ஒரு வார காலம், துன்னுடைய செல்போனை பயன்படுத்தாமல் இருந்தாராம் டீச்சர்..
சமீபத்தில்தான் செல்போனை பயன்படுத்தி, தோழிகளிடம் விஷயத்தை சொல்லி உள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையில் தனியாக வீடு எடுத்து, மாணவனுடன் தங்கியுள்ளேன், இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் தோழிகளிடம் சொன்னாராம். இந்த போன்கால் தான், போலீசாருக்கு மிகப்பெரிய க்ளூவாக இருந்திருக்கிறது.. டீச்சரின் செல்போன் டவரை கண்காணித்து அவரை சுற்றி வளைத்து பிடிக்கவும் உதவியிருக்கிறது.
கைது: இதில், முதல் தவறு டீச்சர் மீதுதான் என்றாலும், நடந்த உண்மையை, உடனடியாக மாணவனின் வீட்டிலோ அல்லது போலீசிலோ சொல்லியிருந்தாலே, இன்று ஜெயில் தண்டனை கிடைத்திருக்காது என்றே தெரிகிறது.. எனினும், இந்த இளம் வயதிலேயே ஜெயில் வரை சென்றுள்ளது அதிர்ச்சையையும், கவலையையும் தந்துள்ளது..!!
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications