வேலையை காட்டிய வானிலை! சென்னையில் பரவலாக கொட்டி தீர்க்கும் கனமழை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சென்னையில் பரவலாக மழை பெய்திருக்கிறது.
சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே சென்னையில் வெயில் குறைந்திருந்த நிலையில், தற்போது பெய்த மழை இதமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதேபோல கன்னியாகுமரியிலும் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் SMRV பள்ளி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தின் மீது தென்னை மரம் வேரோடு சாய்ந்திருக்கிறது. பேருந்து நிலையத்தின் மீது விழுந்த மரத்தை அகற்ற போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர்.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. இரவு 8 மணிக்கு பிறகு இந்த மழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
அதேபோல திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆடையூர், நல்லவன் பாளையம், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பரவலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியிருக்கிறது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிரப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஊட்டி மற்றும் வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பேரிடர் மேலாண்மை துறை, முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு (சென்டிமீட்டரில்)
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), திற்பரப்பு (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 2,
நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications