அதிமுக கவுன்சிலர்களை தாக்கிய வழக்கு.. மா.சுப்பிரமணியன் விடுதலை.. 22 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!
சென்னை: 2002ல் நடந்த சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகவும், பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் இருந்து மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு ஒன்றில் 22 ஆண்டுகளுக்கு பின் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு திமுகவின் மாமன்ற தலைவராக இருந்தவர் மா.சுப்பிரமணியன். அந்த நேரத்தில் சென்னையின் மேயராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். இதன்பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்ததால், மு.க.ஸ்டாலின் வகித்து வந்த மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்எல்ஏ பதவியில் தொடர்ந்தார்.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன், பொறுப்பு மேயராக செயல்பட்டார். இந்த நிலையில் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் மாமன்ற கூட்டம் கூடிய போது, திமுக சார்பாக கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்புடைய டெண்டர் பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தின் போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட, அது ஒருக்கட்டத்தில் மோதலாக மாறியது.
அப்போது அங்கிருந்த மைக், நாற்காலிகள் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. அதில் அதிமுகவின் கவுன்சிலர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, குமாரி, மங்கையர்க்கரசி உள்ளிட்டோருக்கு தலை, கைகளில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக சுகுமார் பாபு, மாமன்ற செயலர் ரீட்டா உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.
இந்த புகார் அடிப்படையில் அப்போதைய மா.சுப்பிரமணியன், சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், மூர்த்தி, வி.எஸ்.பாபு உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கிட்டதட்ட 70க்கும் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது இதன் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் 2002ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களை தாக்கியது தொடர்பான வழக்கில் இருந்து மா.சுப்பிரமணியன் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வழக்கில் இருந்து 6 பேரையும், மற்றொரு வழக்கில் இருந்து 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications