Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்.. ஸ்கேன் ரூமில் அலறிய பெண்.. ஒரு டாக்டரே இப்படி நடந்துக்கலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அபார்ஷனுக்கு அட்மிட் ஆன, பெண்ணை சீண்டியிருக்கிறார் இந்த டாக்டர்.. இப்போது, குட்டு வெளிப்பட்டு பொதுவெளியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்.

சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருபவர் இளங்குமரன் 37 வயதாகிறது.. கடந்த செவ்வாய்க்கிழமை, இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் இங்கு வந்துள்ளார்.

Chennai Stanley Government Hospital Radiology doctor suspended and what happened in Scan Center


அபார்ஷன்:
தனக்கு அபார்ஷன் செய்ய வேண்டும், டாக்டர் இளங்குமரனிடம் சிகிச்சைக்காக வந்திருக்கிறார்.. அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் இளங்குமரன்..

தான் மயக்க நிலையில் இருந்தபோது, டாக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக, அந்த பெண் புதன்கிழமை தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பெண்ணின் கணவர், வில்லிவாக்கம் போலீசில் புகார் தந்தார்.. இறுதியில் டாக்டர் இளங்குமரன் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது... மேலும், நடந்தது என்ன என்பது குறித்து, போலீசார் அவரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த அதிர்ச்சி: இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே, இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 22 வயதாகிறது.. கணவருடன் வசித்து வரும் இந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.. தற்போது காப்பர் டி அணிந்திருக்கிறார்.. இதனால் ஏற்பட்ட வலியின் காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார்.

2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி உள்ளார்கள்.. எனவே, மருத்துவமனை ஊழியர்களும் அந்த பெண்ணை ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த ரேடியாலஜி டாக்டர் அதாவது, கதிரியக்கவியல் முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணன், அந்த பெண் நோயாளியிடம் பரிசோதனை என்ற பெயரில் டிரஸ்ஸை கழட்ட சொல்லியிருக்கிறார்.. மேலும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டதாக தெரிகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், டாக்டர் கோகுல கிருஷ்ணனை சரமாரி திட்டினார்.. அப்போதே அவரிடம் தகராறும் செய்துள்ளார்...

அலறல் சத்தம்: இந்த சத்தம் கேட்டதும், பெண் டாக்டர் ஒருவர் ஓடிவந்துள்ளார்.. ஆனால், அதற்குள், ஸ்கேன் சென்டரிலிருந்து கோகுல கிருஷ்ணன் அவசரம் அவசரமாக வெளியேறி விட்டாராம்.. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பெண் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில், 3 பேர்‌ கொண்ட குழு அமைத்து, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில் விசாரணை குழு அளித்த பரிந்துரையின் பேரில், கதிரியக்கவியல் டாக்டர் கோகுல கிருஷ்ணனை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை:
டாக்டரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும், அவரது ஒரு மாத ஊதியத்தை வாங்கித்தருகிறோம், இந்த விஷயத்தை மட்டும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இதைக்கேட்டு, மேலும் அதிர்ச்சி அடைந்த பெண் நோயாளி, நேராக தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.. மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் அத்தனையையும் புகாராக தந்தார்.. இப்போது, டாக்டர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.. விசாரணையும் நடக்கிறது.

அரசு டாக்டர்: பிரபலமான ஸ்டான்லி மருத்துவமனையிலேயே, அதுவும் ஒரு அரசு டாக்டர், இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபடுகிறார் என்றால், சாமான்ய மக்கள் எங்கேதான் சென்று சிகிச்சை பெறுவது? எந்த நம்பிக்கையில் பெண்கள் செல்வது?

எத்தனையோ டாக்டர்கள், எண்ணற்ற உயிர்களை பிழைக்க வைக்க, தங்களையே அர்ப்பணித்து கொள்கிறார்கள்.. இந்த மருத்துவ தொழிலை, தங்கள் உயிரினும் மேலாக கருதி பணிபுரிந்தும் வருகிறார்கள்.. இருந்தாலும், இளங்குமரன், கோகுல கிருஷ்ணன் போன்ற ஒருசிலர் செய்யும் கீழ்த்தரமான செயல்கள், பொதுமக்களை நிலைகுலைய செய்துவிடுகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+