சென்னை புறநகர்.. அதுவும் மதிய நேரத்தில் இப்படியா? ரேஷனில் வருகிறது மாற்றம்? "நேரமே" சரியில்ல போல
சென்னை: ரேஷன் கடைகளில், ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், மற்றொரு அதிரடி கிளம்பியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மற்ற துறைகளை போலவே, ரேஷன் கடை ஊழியர்களின் பங்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை..

ஞாயிற்றுக்கிழமை: ஆனால், மற்றவர்களை போலவே, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களுக்கும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்தும் வருகிறது.. அந்தவகையில், ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
வெள்ளிக்கிழமை: கடந்த 2014ல் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதில், அலுவலகம் செல்வோர் ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக, மாதத்தின் முதலாவது, 2வது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும், அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.. அதே நடைமுறைதான் இப்போதும் அமலில் உள்ளது.
ஆனால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகளில், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றதாம்.. எனவே, ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லையாம்...
ரேஷன் ஊழியர்கள்: அதுவும் இல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக்குறைந்த ரேஷன்தாரர்களே பொருட்களை வாங்க வருகிறார்களாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை விரைவில் முடிவெடுக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் கடை செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரேஷன் பொருட்களை, சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.. மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன...
நேரம் மாறுகிறது: சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மறுபடியும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதனால்தான், ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கூடிய சீக்கிரம் வெளியாக போகிறதாம். ஏற்கனவே ரேஷன் பொருட்கள் கடத்தல்கள் தமிழக எல்லைகளில் அதிகரித்து காணப்படுகிறது.
எனவேதான், இந்த கடத்தலில் ஈடுபடுவோர் மீது தமிழக போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது ரேஷன் கடைகளில் நேரம் மாற்றியமைக்கப்படும்போது, முறைகேடுகள் மேலும் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications