சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. புறநகர் ரயிலில் வருது அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இயக்கப்படும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழத்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 4 லட்சம் பயணிகள் பயன்பெறவுள்ளனர்.
சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் தான். ஆனால், சென்னை பயணிகளுக்கு மின்சார ரயில் சேவைகள் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகின்றன. குறைந்த நேரத்தில் பயணம், செலவு என பொதுமக்களுக்கு இன்றியமையாத சேவையை ஆற்றி வருகிறது. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.

சென்னை புறநகர் ரயில்களை நம்பி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஐடி துறையில் வேலை செய்வோர், வியாபாரம், தொழில் செய்வோர் என ஏராளமானோர் உள்ளனர். இந்த புறநகர் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழத்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னையில் இருந்து புறநகா் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் 9 பெட்டிகள் இருக்கும். தினமும் புறநகா் ரயில்களில் 8.6 லட்சம் பேரும், நகா் பகுதியில் 3.4 லட்சம் பேரும் பயணிக்கின்றனா்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புறநகா் மின்சார ரயில்களில் பயணிப்போா் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து இந்த வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 21 சதவீதம் போ் அதாவது கூடுதலாக 4 லட்சம் போ் பயணிப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications