சென்னையில் புறநகர் ரயில் சேவை மொத்தமாக முடங்கியது.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்களால் பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் இன்று அதிகாலை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டாலும், சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.


சென்னை போக்குவரத்தில் மிக முக்கியமானதாக இருப்பது புறநகர் ரயில் சேவைதான். சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் வரையிலும், சூலூர்பேட்டா வரையிலும், மறுபுறம் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டு வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். தென் மாவட்டங்களிலிருந்து வரும் சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் அங்கிருந்து சிட்டிக்குள் வரவும் இந்த புறநகர் ரயில்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி இருக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக புறநகர் ரயில்கள் நின்று செல்லும் 10 மற்றும் 11வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, 204 முறை ரயில்கள் இயக்கப்படுவதற்கு பதில், 164 முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கையில் குறைந்த அளவில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவைகளும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று அதிகாலை முதல் இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications