சென்னைவாசிகளுக்கு "வரப்பிரசாதம்".. வருகிறது மேஜர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் துள்ளுகிறது "யானைகவுனி"
சென்னை: சென்னைவாசிகளுக்கு அடுத்த குட்நியூஸ் வரப்போகிறது.. இதுகுறித்த தகவல் ஒன்றை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். என்ன அது?
திமுக இந்த முறை ஆட்சிப்பொறுப்பேற்றதுமே, சிங்கார சென்னை திட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.. இது முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமாகவும் உள்ளது. அதனால்தான், பட்ஜெட் அறிவிப்புகளில்கூட, சிங்கார சென்னைக்கு பிரத்யேகமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

சிங்கார சென்னை: எனவே, பூங்காக்கள், பாலங்கள், சாலைகள், என பல்வேறு விஷயங்களில் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையின் முக்கிய சாலைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, இருந்த பகுதிகளை, சீரமைத்து, புனரமைத்து வருவது ஒருபுறமும், சாலைகளை அகலமாக்குவது, புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில்கூட அண்ணாமலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னைவாசிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
யானைகவுனி பாலம்: இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளனர்.. அடுத்த பாலம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் உள்ள யானைக்கவுனி பாலம்தான் ரெடியாகி கொண்டிருக்கிறது.. சென்னையின் மிகவும் பழமையான பாலம் இது.. வால்டாக்ஸ் ரோட்டையும், பெரியமேடு பகுதியையும் இணைப்பது இந்த பாலம்தான்.
ஆனால், இந்த பாலம் மிகவும் பழுதடைந்திருந்ததால், வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதனால், கடந்த 2016-ம் ஆண்டில் இந்த பாலம் மூடப்பட்டது.. பிறகு, பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட, ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்தது. இதையடுத்து, ரூ.43.77 கோடி மதிப்பில் புதிய பாலம் பணிகள் துரிதமாகின. அதாவது, ஏற்கனவே, 50 மீட்டர் நீளத்துக்கு இருந்த பாலத்தை, 156 மீட்டராக நீட்டித்து கட்டும்பணிகள் நடந்தன.
மக்கள் குஷி: இப்போது அந்த பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டதாம்.. மிச்சமிருக்கும் பணிகளும், ஒன்றிரண்டு மாதத்தில் முடிவடைந்துவிடும் என்பதால், வரும் ஜனவரி மாதமே, இந்த பாலம் பொதுக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பதுடன் ரயில்கள் தாமதமாவதும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications