தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் யாருங்க இது? கார் கதவை திறந்து மூடிய மனநலம் பாதித்த நபர்.. இப்படி நடக்கணுமா?
சென்னை: தாம்பரம் பஸ் ஸ்டாண்டு எப்போதுமே ஜனநடமாட்டம் உள்ள பகுதியாகும்.. அத்தனை பொதுமக்கள் இருந்தும்கூட, இப்படியொரு துயரம் நடந்துள்ளது.. இதில் வேதனை என்னவென்றால், போலீஸ்காரர் ஒருவரும், ஸ்பாட்டில்தான் இருந்திருக்கிறார்.
தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவர் வழக்கறிஞராக உள்ளார்..

தாம்பரம் பஸ் ஸ்டாண்டு:
அதேபோல, வழக்கறிஞர் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் வினோத் உள்ளிட்ட 3 பேர் திண்டிவனம் நோக்கி காரில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.. அப்போது தாம்பரம் பஸ் ஸ்டாண்டில், காரை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக இறங்கியிருக்கிறார்கள்.
அப்பொழுது அயனாவரத்தை சேர்ந்த ரங்கநாதன் என்ற 60 வயது நபர், இவர்களது காரின் கதவை திறந்து வேகமாக மூடியிருக்கிறார்.. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம்.. திடீரென இவரது செய்கையை கண்டு கொஞ்சமும் எதிர்பார்க்காத வழக்கறிஞர்கள் 2 பேரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, ஆவேசமாக தாக்கியிருக்கிறார்கள்..
மாறி மாறி நடத்தப்பட்ட தாக்குதல்
அப்பொழுது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், போலீசார் முன்னாடியே எதுக்கு இப்படி அடிக்கிறீங்க? என்று கேட்டுள்ளார்.. அவர் கேட்பதை கூட காதில் வாங்காமல், வழக்கறிஞர்கள் 2 பேரும், "எங்க கார் கதவை எப்படிடா திறந்து மூடலாம்" என்று கேட்டு ஆத்திரம் அடங்காமல் கடுமையாக அடித்து தாக்கியிருக்கிறார்கள்..
2 வழக்கறிஞர்களும் மாறி, மாறி விடாமல் அடித்து கீழே தள்ளியதில், அந்த 60 வயது நபர், அங்கிருந்த சிமெண்ட் திட்டின் மீது மோதினார்.. இதில், அவரது தலை வேகமாக சிமெண்ட் திட்டில் இடித்து, அங்கேயே சரிந்து விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்.. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இறந்த பெரியவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு, மணிகண்டன் மற்றும் வினோத் என்ற 2 வழக்கறிஞர்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, இறந்தவர் யார் என்ற விவரத்தையும் சேகரித்துள்ளனர்.. அவரது பெயர் ரங்கநாதன்.. அயனாவரத்தை சேர்ந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.. கொலையாளிகள் மணிகண்டன்(33) வழக்கறிஞர், வினோத் (28) ஆவர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications