தாம்பரம் லாட்ஜ் ரூமில் திருதிருனு விழித்த பெண்.. 14 வயதில் என்னவொரு துணிச்சல்? சென்னை போலீசார் சபாஷ்
சென்னை: இப்போதெல்லாம் ஆன்லைன் வகுப்புகளுக்காக வேறு வழியில்லாமல் மாணவ, மாணவிகளிடம் மொபைல் போன்கள் கொடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. எனினும், அவர்களை பெற்றோர் கவனித்து, கண்காணிப்பில் வைத்தால் மட்டுமே தேவையில்லாத விபரீதங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும் என்கிறார்கள் காவல்துறையினர். காரணம், இன்ஸ்டாவில் பழகி, சில பெண்கள் ஆபத்துகளில் சிக்கி கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. இப்படி சிக்கிய 8ம் வகுப்பு மாணவியை, நேற்றைய தினம் சென்னை லாட்ஜிலிருந்து போலீசார் மீட்டுள்ளனர். மாணவியை எப்படி மீட்டார்கள் தெரியுமா?
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.. தாத்தா பாட்டியின் அரவணைப்பில் உள்ள இந்த மாணவி எந்நேரமும் இன்ஸ்டாவில் மூழ்கி, தெரிந்தவர், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் மெசேஜ் மூலம் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.

அப்படி 3 மாதத்துக்கு முன்பு பழக்கமானவர் 19 வயது பொள்ளாச்சி சூர்யா.. இருவரும் காதலித்துள்ளனர்.. இரவெல்லாம் அரைகுறை உடையில் வீடியோகாலில் பேசி வந்துள்ளனர், மாணவியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு, பொள்ளாச்சியில் இருந்து பைக்கிலேயே சென்னை ஆவடிக்கு சென்றுள்ளார்.
தாம்பரம் லாட்ஜ்
மாணவியை வீட்டைவிட்டு வெளியே வரும்படி சொல்லவும், மாணவியும் தயாரானார். இதை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்கவும், பாட்டியை கீழே தள்ளிவிட்டு சூர்யாவுடன் பைக்கில் ஏறி பறந்தார் மாணவி. இதற்கு பிறகுதான் ஆவடி போலீசில் புகார் தரப்பட்டு மாணவியை தேடியபோது, தாம்பரத்தில் லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து இருவரும் தங்கியிருப்பது தெரியவந்தது.. உடனே போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டு, சூர்யாவையும் போக்சோவில் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவியை போலீசார் எப்படி மீட்டனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.. அதாவது, லாட்ஜுக்கு மாணவியை அழைத்து சென்று ரூம் புக் செய்துள்ளார் சூர்யா.. அப்போது லாட்ஜ் தரப்பில் சூர்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு அதிர்ந்த சூர்யா, தன்னுடைய செல்போன் நம்பரை தர தயங்கியிருக்கிறார்.. உடனே சுதாரித்துக் கொண்ட மாணவி, தன்னுடைய தாத்தாவின் போன் நம்பரை லாட்ஜில் தந்துள்ளார்.. பிறகு லாட்ஜில் இவர்களுக்கு அறை ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
லாட்ஜ் ரூம்
பின்னர் மாணவி தந்திருந்த போன் நம்பருக்கு "லாட்ஜ்ஜில் ரூம் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது" என்ற மெசேஜ் லாட்ஜ் நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. லாட்ஜிலிருந்து மெசேஜ் வந்ததுமே தாத்தா பதறிப்போய்விட்டார்.. இதற்கு பிறகுதான், எந்த லாட்ஜிலிருந்து மெசேஜ் வந்தது என்பதை பார்த்து, உடனே ஆவடி மகளிர் போலீசுக்கு தகவல் தந்தார். சூர்யா புக் செய்திருந்த தனியார் லாட்ஜ் தாம்பரத்தில் இருப்பது உறுதியானது..
இதையடுத்து, ஆவடியிலிருந்து தாம்பரத்துக்கு போலீசார் விரைந்து சென்று, மாணவியை மீட்டனர். வெறும் 3 மணி நேரத்திற்குள் மாணவியை மீட்டிருக்கிறார்கள் நம்முடைய போலீசார்.
போக்சோவில் கைது
போலீசார் கைது செய்யும்போது சூர்யா, "நானும் அவளும் லவ் பண்றோம், அவளாகவே விருப்பப்பட்டுதான் என்னுடன் லாட்ஜுக்கு வந்தாள்.. என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க?" என்று கேட்டாராம்.
அதற்கு போலீசார் "18 வயது நிரம்பாத பெண், விருப்பப்பட்டு வந்தாலும் அது பாலியல் குற்றம், பாலியல் அத்துமீறல், கடத்தல் என்றே கருதப்படும்.. 18 வயது நிரம்பாமல், உன்னையும் ஒரு பெண் கடத்தி சென்றால், அதுவும் பாலியல் குற்றம்தான், போக்சாவில் கைது செய்யப்படுவார்கள்" என்று சொல்லியதுடன், சூர்யாவையும் போக்சோவில் கைது செய்து ஜெயிலில் தள்ளியிருக்கிறார்கள்.
இன்ஸ்டா மணிகண்டன்
மீட்கப்பட்ட மாணவியிடம் விசாரித்தபோது, சூர்யா பாலியல் தொல்லையை தந்தது தெரியவந்துள்ளது.. இந்த மாணவியின் அப்பா, வீட்டை விட்டே எங்கோ போய்விட்டாராம்.. அம்மா, வெளியூரில் தங்கி ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாராம். அதனால்தான் தாத்தா பாட்டியின் பராமரிப்பில் மாணவியை விட்டு சென்றிருக்கிறார்.
ஏற்கனவெ இப்படித்தான் இன்ஸ்டாவில் மணிகண்டன் என்பவருடனும் இந்த மாணவி பழகியிருக்கிறார்.. அப்போதும் இதுபோலவே பெரிய பிரச்சனையாகி, அது சம்பந்தப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதாம்.. அப்படியிருந்தும் மீண்டும் சூர்யாவிடம் பழகி வந்துள்ளார் இந்த 8ம் வகுப்பு மாணவி...!!!












Click it and Unblock the Notifications