தாம்பரத்தில் ரயில் என்ஜின் மீது அசையாமல் நின்று கொண்டேயிருந்த பெண்.. கிட்ட பார்த்தால்? பரபர சென்னை
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையமானது, சென்னைக்கு தெற்கே ஒரு முக்கிய ரயில் நிலையமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் இந்த ரயில்வே நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.. தாம்பரம் நிலையத்திலிருந்து, சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டும் வருகின்றன.. இந்நிலையில் பெண் ஒருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தும், இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காண்போரை குழப்பம் அடைய செய்து வருகிறது. என்ன நடந்தது?
சென்னைபுறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள்.. இங்குள்ள பொது மக்கள், பணிக்கு செல்வோர், பள்ளி, கல்வி நிறுவனங்கள் செல்வது உட்பட பல்வேறு தேவைகளுக்காக, நகரபகுதியில் இருந்து ரயில் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்கு பிரதானமாக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் விளங்கி கொண்டிருக்கிறது.

எனவேதான் ரயில் போக்குவரத்தினை விரிவுபடுத்தியவாறே உள்ளது.. கடந்த 6ம்தேதிகூட, தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் (16103) தினமும் மாலை 6.10 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது..
தெற்கு ரயில்வே
அந்த ரயில் காலை 5.40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்து, அதேபோன்று மறுமார்க்கமாக தினசரி ரயில் (16104) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 6மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை வெளியிட்டு கூறியிருந்தது..
இந்நிலையில், தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. தாம்பரம் நிலையம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதி உள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை பகுதியிலுள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்களை கழற்றி இழுத்து செல்லும், 'சப்போர்ட் இன்ஜின்' அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
இருட்டில் பரபரப்பு
நேற்றிரவு 9 மணிக்கு, அந்த என்ஜின் மீது திடீரென பெண் ஒருவர் ஏறி நின்றுகொண்டார்.. எதற்காக ஏறினார் என்று தெரியவில்லை.. நீண்டநேரமாக ரயில் மீது அசையாமல் நின்று கொண்டேயிருந்தார்.. இதனால், இருட்டில் அவர் மின்சாரத்தில் அடிபட்டு இறந்துவிட்டாரா? என்று அங்கிருந்தவர்களுக்கு சந்தேகமும் கலக்கமும் அதிகமாகிவிட்டது.
எனவே சுற்றுவட்டார பகுதியில் இருந்த அனைவருமே அந்த பகுதியில் கூடிவிட்டார்கள்.. இதனால் ரெயில்வே சுரங்க மேம்பாலபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
அதற்குள் இது குறித்த தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர்.. ரெயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினார்கள்.. அந்த பெண்ணுக்கு சுமார் 40 வயதிருக்கும் என்கிறார்கள்.. யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விசாரணை
தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரின் முதற்கட்ட விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணை நடந்து வருகிறது..
ரயில் என்ஜின் மீது நீண்ட நேரமாக நின்ற பெண்ணை வேடிக்கை பார்ப்பதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications