Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரத்தில் சிக்னலில் கூன் விழுந்து, கையில் குச்சியோடு யாசகம் கேட்ட 2 பேர்! திகைத்து பார்த்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகளுடன் யாசகம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக துணை மேயர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில் இதே சென்னையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. யாரிந்த நபர்கள்? இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்துவது என்ன?

தமிழகத்தின் பெருநகர பகுதிகளில் சிக்னலில் யாசகம் எடுப்போர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. எனினும், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும், அதிகம் பார்க்க முடிகிறது.

Chennai Tambaram

பச்சிளம் குழந்தைகள்

இந்த குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்சனை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார். இந்த குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.

எனவேதான், அவர்கள் வைத்திருக்கும் குழந்தைகள் அவர்களுடன் தானா என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சோதனையில் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்படும் என்றும், மற்ற குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் துணை மேயர் நேற்றைய தினம் கூறியிருந்தார்.

சென்னை தாம்பரம் சிக்னல்

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி நகர் சிக்னல் அருகே, ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியாக பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.. ஒரே சிக்னலில் வேறு வேறு இடத்தில் இவர்கள் யாசகம் பெற்றபடி இருந்தனர்..

இருவருமே கூன் விழுந்த மாற்றுத்திறனாளிகள் போல் தோற்றமளித்தனர்.. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல தென்பட்ட இவர்கள், நடக்கமுடியாமல், கூன் வளைந்து கையில் குச்சி வைத்துக் கொண்டு, சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது, இங்குமங்கும் ஓடி ஓடி, அங்கிருந்த வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வந்தனர்.

கையில் குச்சியுடன்

இவர்களது தோற்றத்தையும், நிலைமையையும் கண்டு பரிதாபப்பட்ட சில வாகன ஓட்டிகள் யாசகம் கேட்டபோது பண உதவி செய்துள்ளனர். ஆனால், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் யாசகம் கேட்டு தொல்லை கொடுத்து வந்த நிலையில், பலருக்கும் அவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்தது. எனவே, இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு தகவல் தந்தனர்..

போலீசாரும் விரைந்து வந்து, சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை இடையூறு செய்து யாசகம் கேட்டு தொந்தரவு செய்வது யார்? என்று கண்காணித்தனர்.. பிறகு மாற்றுத்திறனாளிகள் போல் நடக்க முடியாமல் யாசகம் பெற்ற 2 பேரையும் அழைத்து, ஏன் இப்படி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்கிறீர்கள்? யார் நீங்கள்? என்று விசாரித்தனர்..

நிமிர்ந்து எழுந்து ஓடி

இருவருமே முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார்கள்.. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை ஸ்டேஷனுக்கு வருவமா அழைத்துள்ளனர். இதைக்கேட்டு பயந்து போன இருவரும் திடீரென தங்கள் மாறுவேடத்தை உதறிவிட்டு தலைதெறிக்க ஓடினார்கள்.

இருவரும் சாலையில் ஓடியதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த விசாரித்ததில் அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த நிதின் பபன் பவார் (21), தியா பவார் (20) என்பதும், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்து யாசகம் பெற்றதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் யாசகம் பெற்று பணம் சம்பாதிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டுள்ளனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி யாசகம் பெறுவதற்காகவே ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்துள்ளார்களாம்..

போலீசார் எச்சரிக்கை

சென்னை முழுவதும் கடந்த ஒரு வருடமாக இப்படி நடித்து, யாசகம் பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களிடமிருந்து 14 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் இதே போன்று மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இவர்களை போல பலர் இதே போன்று பயிற்சி அளிக்கப்பட்டு சென்னை முழுவதும் யாசகம் பெறுவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+