தாம்பரத்துக்கு ஹேப்பி.. கோவை டூ சென்னை ஸ்பெஷல் ரயிலில்.. அன்ரிசர்வ் பெட்டிகளை கண்டு குஷியான பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் - கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. இந்த அதிரடி சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கியிருக்கிறார்கள்.. கல்வி கற்க, வேலை நிமித்தம், தொழில் சார்ந்த பணிகள் என பல்வேறு விஷயங்களுக்காக, இவர்கள் தங்கி உள்ளனர். எனவே, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

tambaram coimbatore kovai

தாம்பரம்: இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணங்களை மேற்கொள்ள முடிகிறது.. சமீபத்தில்கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயிலானது இயக்கப்பட்டது..

அதாவது, தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில், மாலை, 6:00 மணிக்கு கிளம்பும் இந்த ரயிலானது, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவையை அடைகிறது. பிறகு, இதே வழித்தடத்தில், கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

மீண்டும் நீட்டிப்பு: அந்தவகையில், தாம்பரத்தில் இருந்து, கோவைக்கு சிறப்பு ரயில் அக்டோபர் 11ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரையும், கோவையில் இருந்து தாம்பரத்துக்கு அக்டோபர் 13ம் தேதி முதல், டிசம்பர் 1ம் தேதி வரையும் என மொத்தம் 8 முறை இயக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்வே சேவையை மீண்டும் நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ரயில்பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ரயில்வே நிர்வாகம் குட்நியூஸ் வெளியிட்டிருக்கிறது.

வரவேற்பு: இதுதொடர்பாக பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் சொல்லும்போது, "தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான வரவேற்பு தொடர்ந்து கிடைத்துவரும் நிலையில், பயணிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயிலில், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு அன்ரிசர்வ் பெட்டிகள், இரண்டு எஸ்.எல்.ஆர்.,/ டி பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

மிகுந்த மகிழ்ச்சி: சிறப்பு ரயில்வே சேவையை மீண்டும் நீட்டித்துள்ளதுடன், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையையும் ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+