Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Taramani Triple Murder Case: சென்னை தரமணியில் பீகார் பெண்ணின் உடல் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் பீகாரைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கவுரவ் குமார் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தையின் உடல்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கவுரவின் மனைவி உடலையும் போலீஸார் பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து மீட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி சென்னை அடையாறு இந்திரா நகர் அருகே ரத்தம் சொட்ட சொட்ட சாக்குமூட்டை ஒன்று இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். பின்னர் அடையாறு ஜே 2 காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வந்து அந்த மூட்டையை பிரித்த போது அதில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரின் உடல் இருந்தது.

chennai bihar munitha kumar

உடனே அந்த நபர் யார் என்ற விவரங்களை சேகரித்த தொடங்கினர். அப்போது உடல் கிடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்த போது ஒரு இரு சக்கரவாகனத்தில் யாரோ இருவர் அந்த மூட்டையை அங்கே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

திடுக் தகவல்கள்

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்த போதுதான் பல திடுக்கிடும் சம்பவங்கள் கிடைத்தன. மீட்கப்பட்ட அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஒரே நாளில் அந்த இளைஞரின் மனைவி, 2 வயது மகன் ஆகியோரையும் மர்ம நபர்கள் கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.

அந்த இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவலின் பேரில் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தமிழகத்திற்கு வேலைக்காக வந்ததும் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24), அவரது மனைவி, 2 வயது மகன் ஆகியோர் என தெரியவந்தது.

நண்பர்கள்

அவர்களை பீகாரை சேர்ந்த சில நண்பர்கள் அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கவுரவ் குமாருக்கு சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றும் வேலை கிடைத்தது. இதையடுத்து கவுரவ் குமார் தனது குடும்பத்தினர் அந்த கல்லூரியில் உள்ள ஒரு பகுதியில் தங்கியிருந்தனர்.

கவுரவ் குமார்

கடந்த 24 ஆம் தேதி அந்த பாலிடெக்னிக்கில் தனது நண்பர்களுடன் சிலருடன் கவுரவ் குமார் மது அருந்தினாராம். அப்போது அவருடன் மனைவியும் குழந்தையும் இருந்தது தெரியவந்தது. அப்போது மதுபோதையில் இருந்த நண்பர்கள் சந்தோஷ்குமார், லலித், விகாஷ்குமார் உள்ளிட்ட 5 பேரும், கவுரவ்வின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அப்போது அவர்களை கவுரவ் குமார் தடுத்த போது போதையில் இருந்த 5 பேரும், கவுரவ் குமாரின் தலையில் இரும்பு ராடால் அடித்ததில் அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து அந்த பெண்ணும், தனது கணவரை காப்பாற்ற போராடிய போது அவரையும் இரும்பு ராடால் அடித்து கொன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அழுதுக் கொண்டிருந்த 2 வயது குழந்தையையும் அந்த அரக்கர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கவுரவ் குமாரின் உடலை அடையாறிலும் குழந்தையின் உடலை பக்கிங்ஹாம் கால்வாயிலும் உடலை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் தெரியவந்தது.

3 பேர் கொலை

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் 26ஆம் தேதி நடந்திருந்தாலும் 3 பேர் கொலையான சம்பவம் கடந்த 28ஆம் தேதி கைதான கவுரவ்வின் நண்பர்களிடம் இருந்து தெரியவந்ததை அடுத்து அன்று போலீஸார் குழந்தை, மனைவியின் உடலை தேடினர். இந்த நிலையில் பக்கிங்ஹாம் கால்வாய் இருந்து 2 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

பெண்ணின் உடல்

இந்த நிலையில் கவுரவ்வின் மனைவியின் உடலை கொலையாளிகள் தரமணியில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியதாக சொன்னதன் பேரில் அங்கு போய் போலீஸார் தேடினர். அப்போதுதான் அங்கிருந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டியதாக தெரிவித்தனர். மேலும் அந்த தூய்மை பணியாளர்களுக்கு அந்த குப்பையில் உடல் இருப்பதும் தெரியவில்லை என்றனர்.

பெண்ணின் உடல் மீட்பு

எனினும் போலீஸார் கடந்த 28ஆம் தேதி முதல் பெண்ணின் உடலை தேடி வந்தனர். சுமார் 50 காவலர்கள், 25 மாநகராட்சி ஊழியர்கள் என முனிதாவின் உடலை தேடி வந்த நிலையில் 3ஆவது நாளான இன்று தேடுதல் வேட்டையில் அவரது உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே கவுரவ் குமார், 2 வயது குழந்தையின் உடல்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் உடலும் அங்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+