சென்னை மக்களே கவனம்.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று காலை 9 மணி முதல் 5 மணி நேரம் மின்தடை
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதன்படி ஆவடி, வேளச்சேரி, போரூர், அடையார், மதுரவாயல் உள்பட பல இடங்களில் இன்று மின்சேவை பாதிக்கப்பட உள்ளது.
தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDGO) சார்பில் மாநிலம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் சில இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணியின் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 10.07.2024 (இன்று, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, திருமுல்லைவாயல், வேளச்சேரி, போரூர், பொன்னேரி, அடையார், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி - வேளச்சேரி: ஆவடி ஏரியாவை பொறுத்தவரை திருமுல்லைவாயல், மிட்டணமல்லி, பாரதி நகர், முருகன் கோவில், மோரை, மாதா கோவில், அண்ணா நகர், வீராபுரம், திருமலைநகர் பகுதிகளிலும், வேளச்சரியை பொறுத்தமட்டில் வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, எல்ஐசி காலனி, டான்சி நகர் 1 முதல் 7 வது தெரு, தரமணி லிங்க் ரோடு பகுதி, தண்டிஸ்வரம் 11வது தெரு, 12 வது தெருக்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
போரூர்: லட்சுமி நகர், நியூ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகர், அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு, லட்சுமி நகர் 40 அடி ரோடு, பரணிபுத்தூர், தென்னியார் அகரம், மதுரம் நகர், தனலட்சுமி நகரின் ஒரு பகுதி, பெரிய கொலுத்துவான்சேரி, பரணிபுத்தூர் ஊராட்சியின் ஒரு பகுதி, திருமுடிவாக்கம், டெம்பிள் விவ், திருநீர்மலை மெயின் ரோடு, திர ஊரக பெருமாள் கோவில் நகர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், எஆர் எடை மேடை, ஷர்மா நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
பொன்னேரி: என்ஜிஓ நகர், சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமி புரம், பாலாஜி நகர், டிவி பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தாடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, அலடு, எஆர் பாலையம், வெம்பாக்கம் அனுப்பம்பட்டு, அக்கரம்பேடு, தேவதானம், தோட்டக்காடு பெரம்பேடு, டிவி புரம் மற்றும் கோடூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அடையார்: கொட்டிவாக்கம், திருவான்மியூர், காமராஜ் நகர் 3வது, 4வது மெயின் ரோடு, பிடிசி டெப்போ, திருவள்ளூவர் சாலை 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலேரி பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல்: அக்ரோலா, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் தெரு, வரலட்சுமி நகர், அபிராமி நகர், மிட்டனமல்லி, பாரதி நகர், முருகன் கோவில் மோரை, மாதா கோவில், அண்ணாநகர், வீராபுரம், திருமலை நகர், மவுண்ட் பிரிக்ஸ், விவேகானந்தா தெரு, சமயபுரம் பிரதான சாலை, சாய் நகர், ஓம்சக்தி நகர், போரூர் கார்டன் பேஸ் 1 முதல் 2 வரை, ஹெரிடேஜ் விவேகானந்தா தெரு, மெட்டுகுப்பம் பிரதான சாலை, அண்ணா தெரு, தர்மராஜா கோவில் தெரு, காமதேனு நகர், எழிப்பிடாரி அம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, ஆண்டாள் நகர், மெட்ரோ நகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications