செந்திலுக்கு 3 மனைவிகள்.. 3 பேருமே துரத்தியடித்த கொடுமை.. செய்த காரியம் அப்படி!

ஐயப்ப பக்தரை போல வேடமிட்டு திருடிய நபர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில்குமாருக்கு 3 மனைவிகள்.. ஆனால், இவர் செய்த காரியத்தை பார்த்ததும் 3 பேருமே துரத்தி அடித்துவிட்டனராம்.. ஆனாலும் கவலைப்படாத செந்தில்குமார், ஜீன்ஸ், டீ-ஷர்ட், கூலிங் கிளாஸ் என இளைஞர் கெட்-அப்புடன் பக்கா திருடனாக வலம் வந்து, இப்போது மாமியார் வீட்டில் இருக்கிறார்.

கேகேநகர் பொன்னம்பலம் சாலையில் ஒரு ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு கடந்த கடந்த 6-ம் தேதி இருமுடி கட்ட பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அதன் பூஜையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், நெசப்பாக்கத்தை சேர்ந்த முத்துமாரியப்பனும் ஒருவர்.. மனைவி பிரதிபாவுடன் இந்த பூஜையில் கலந்து கொண்டார். அப்போது திடீரென பிரதிபாவின் ஹேண்ட் பேக் காணவில்லை.. அதில்தான் ஐபோன், பணம் வைத்திருந்தார் பிரதீபா.

 திருட்டு

திருட்டு

கோயிலுக்குள், பக்தர்கள் நிறைந்திருக்கும் இந்த இடத்தில் திருட்டா? என்று அதிர்ந்த இது சம்பந்தமான கோயில் நிர்வாகத்திடம் சொல்ல, உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான், ஒருவர் பிரதிபாவின் ஹேண்ட் பேக்கை திருடுவதும் தெரிந்தது.. திருடுவதை கண்டு பிரதிபா அதிர்ச்சி ஆவதை விட, அந்த திருடர் ஐயப்ப பக்தர் என்பதை பார்த்துதான் அதிக அதிர்ச்சி அடைந்தார்.

 சிக்னல்

சிக்னல்

உடனடியாக சென்னை கேகேநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கவும், விசாரணை ஆரம்பமானது.. பிரதிபாவின் செல்போன் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட நபரை வளைத்து பிடித்தனர். அவர் பெயர் செந்தில்குமார், பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். ஆனால், இவர் நிஜமான ஐயப்ப பக்தர் இல்லை. கழுத்தில் மாலையும் இல்லை.. வெறும் கோயில்கள் மட்டுமில்லாமல், கல்யாணம், கச்சேரி என்று எங்கு கூட்ட நெரிசல் இருந்தாலும் உள்ளே புகுந்துவிடுவார் செந்தில்குமார்.

 பாஜக கல்யாணம்

பாஜக கல்யாணம்

இப்படித்தான் போன மாதம் தி.நகரில் பாஜக பிரமுகர் வீட்டு கல்யாணம் நடந்தது.. உடனே உள்ளே புகுந்த செந்தில்குமார், மணமேடையில் தம்பதிகளுக்கு தந்த மொய் பணத்தை துணிச்சலுடன் திருடி இருக்கிறார்.. இது சம்பந்தமாக புகார் தரப்பட்டு அதில் சிக்கியவர்தான் செந்தில்குமார்.

 கல்யாண வீடு

கல்யாண வீடு

திருச்சியை சேர்ந்த இவர், ஐடிஐ படித்துள்ளார்.. ஒரு டான்ஸ் குழு வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்... அதில் வருமானம் சரியாக வரவில்லை.. அதனால்தான் இப்படி திருட ஆரம்பித்துவிட்டார். கல்யாண வீட்டில் திருடி ஜெயிலுக்கு போய் வெளியே வந்தாலும், திருட்டில் உள்ள ருசியை கண்டுகொண்டார் செந்தில்குமார்.

 சந்தேகம் வராது

சந்தேகம் வராது

அதனால் சாதாரண திருடன் காஸ்ட்லி திருடனாகிவிட்டார்.. திருடன் என்கிற இமேஜ் வராமல், காஸ்ட்லி டிரஸ் போட்டுக் கொண்டுதான் லூட்டியில் இறங்குவார்... பக்கா டீசன்ட்-ஆக இருப்பார்.. யாருக்குமே சந்தேகம் வராது.. இந்த களவாணித்தனம் செய்யும் செந்தில்குமாருக்கு 3 மனைவிகளாம்... இதில் 2 பேர் இறந்துவிட்டனர்.. ஒருவரை செந்தில்குமாரே எரித்து கொன்று ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார். இவர் திருடுவது தெரிந்ததும் 3 மனைவிகளுமே இவரை வீட்டுக்குள் சேர்க்கவில்லையாம்.

 கைது

கைது

கொலை, கொள்ளை என சொகுசாக தனியாக, வாழ்ந்து வரும் செந்தில்குமார் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறார்.. கல்யாண வீடு என்றால் ஜீன்ஸ், டீ-ஷர்ட், கூலிங் கிளாஸ் என யூத் கெட்-அப்.. இதுவே கோயில் என்றால் காவி, கருப்பு வேட்டிகள்.. இப்போது இந்த டிப்-டாப் ஆசாமி சிறையில்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+