சென்னையின் மூக்குப்பொடி சித்தரே கதி.. பெயின்டரின் "அபச்சாரம்".. அப்பகூட"சிவ சிவ" நாமம்..பரிதாப கமல்
சென்னை: சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும், கமல் உஸ்மான் விவகாரத்தின் பரபரப்பு அடங்கவில்லை.. கொலை செய்துவிட்டு கைதாகி உள்ள கமல் உஸ்மான், போலீசில் எப்படி சிக்கினார் என்பதுடன், அவரை பற்றி கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன.
யார் இந்த கமல் உஸ்மான்? சென்னை நீலாங்கரை அறிஞர் அண்ணாநகர் 7வது தெருவை சேர்ந்தவர் கமல் உஸ்மான்.. 48 வயதாகிறது.. இவர் பிறப்பில் முஸ்லிமாக இருந்தாலும், நாளடைவில் தீவிரமான சிவன் பக்தராக மாறிவிட்டார்..

20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. ஆனால், தம்பதியிடையே நிறைய தகராறுகள் வந்துபோயுள்ளன.. ஒருகட்டத்தில் கமல் உஸ்மானின் நடவடிக்கையால் வெறுத்துப்போன மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்...
கமல் உஸ்மான்: இதற்கு பிறகு, கமல் உஸ்மான், திருவான்மியூர் கோயில் அருகிலேயே வியாபாரம் செய்து, தனியாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால், கொரோனா நேரத்தில் வியாபாரம் சரிவை நோக்கி செல்லவும், சொந்த பிசினஸை விட்டுவிட்டு, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் அருகே கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.. ஆனால், குடும்பம், குட்டி என யாருமே இல்லாததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
எனவே, அதே பகுதியில் உள்ள மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்து வந்திருக்கிறார்.. அங்கு கொடுக்கும் பிரசாதத்தையே தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இப்படி தினமும் கோயிலுக்கு போகும்போது, பெயின்டர் செந்தில் குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்..
பெயின்டர் அறிமுகம்: இவர் திருவான்மியூர் பிடிகே நகரை சேர்ந்தவர்.. பெயின்டருக்கு 51 வயதாகிறது.. திருமுடி விநாயகர் கோயில் அருகே, ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த வீட்டில் நிறைய வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருப்பதால், அவர்களுடனேயே பெயின்டரும் தங்கி உள்ளார். காலையில், அந்த தொழிலாளர்கள் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டால், தன்னுடைய ரூமுக்கு இளம்பெண்களை அழைத்து வந்து தினமும் ஜாலியாக இருப்பாராம்.
இப்படித்தான், சம்பவத்தன்று, ஒரு பெண்ணுடன் கோயில் முன்பு நின்று செந்தில்குமார் பேசிக்கொண்டிருந்தார்.. அந்த நேரம் பார்த்து, கமல் உஸ்மான் கோயிலுக்கு வந்துள்ளார்.. கோயில் வாசலிலேயே இப்படி பெண்ணுடன் பேசி "அபச்சாரம்" செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்குமே வாக்குவாதம் வந்துள்ளது.. நடுரோட்டில் இவர்கள் தகராறு செய்வதை பார்த்து, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
கோயில் வாசல்: ஆனால், கமல் உஸ்மான் மட்டும் ஆவேசமாகவே இருந்துள்ளார். மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று, கற்பூரம் ஏற்றிவைத்தார்.. 'கோயில் வாசலிலேயே இப்படி, அசிங்கமாக பெயின்ட்டர் நடந்து கொள்கிறாரே, என்னால் ஜீரணிக்கவே முடியல' என்று கண்ணீர்விட்டு சாமி கும்பிட்டுள்ளார்.. அபபோதுதான், சிவபெருமான் திடீரென கமல் உஸ்மான் முன்பு தோன்றினாராம்.. "அந்த பெயிண்டர், எனக்கும் கெட்டவன் என்று தான் தெரிகிறது. அதனால் அவனை கொன்று விடு" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டாராம்.
கடவுளையே இந்த பெயின்ட்டர் கோபப்படுத்தி விட்டாரே? என்ற ஆத்திரத்தில், சிவபெருமானின் உத்தரவுப்படியே, பெயின்ட்ரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் கமல் உஸ்மான்.. தன்னுடைய ரூமுக்கு வந்து கத்தியை எடுத்து கொண்டு, பெயின்ட்ரை வீட்டுக்கு போனார்..
சிவ சிவ: செந்தில்குமாரிடம், "உன்னை கொலை செய்ய சொல்லி கடவுளே உத்தரவிட்டுள்ளார்.. எனவே, நீ இந்த உலகத்தில் வாழ தகுதியான நபர் கிடையாது.. செத்து விடு" என்று சொல்லிக் கொண்டே, கத்தியால் குத்தியிருக்கிறார்.. மொத்தம் 18 முறை குத்தியிருக்கிறார்.. வயிற்றில் குத்தும்போது, "சிவ சிவ" என்று சொல்லிக்கொண்டே குத்தி கொன்றுள்ளார்..
ரத்தவெள்ளத்தில் பெயின்டர் சரிந்து இறந்துவிடவும், நேராக, போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்துள்ளார். ஆனால், போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியெல்லாம் சிவ சிவ என்றே சொல்லிக்கொண்டு போயிருக்கிறார். எந்தவிதமான பதட்டமும் அவரிடம் காணப்படவில்லையாம்.
திருவான்மியூர்: போலீசாரிடம், "நான் ஒரு சிவ பக்தன்.. திருவான்மியூர் திருமுடி விநாயகர் கோயில் தெருவில் உள்ள மூக்குபொடி சித்தர் கோயிலுக்கு அடிக்கடி போவேன்.. அப்போது செந்தில்குமார் என்னை கேலி, கிண்டல் செய்து கொண்டேயிருப்பார்.. நானும் இதை பற்றி தினமும் சிவனிடம் முறையிட்டு கொண்டே வந்தேன்.. அவன் கெட்டவன் என்று சிவன் சொன்னதால்தான், செந்தில்குமாரின் கதையை முடித்துவிட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.
இதைக்கேட்டதும் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கமல் உஸ்மான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டதால், அவர் சொல்வதை முதலில் நம்பவில்லையாம். அதனால், போலீஸாருக்கு சந்தேகம் வரவும், அவர் சொன்ன இடத்துக்கு நேரிலேயே சென்று பார்த்தபோதுதான், செந்தில்குமார் சடலம் கிடந்துள்ளது.. அதற்கு பிறகே கமல் உஸ்மான் பற்றின விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்..
மூக்குப்பொடி சித்தர்: மனைவியை விட்டு பிரிந்தபோதே, மனவிரக்தியுடன் காணப்பட்டாராம் கமல் உஸ்மான். ஆனால், சமீபத்தில் மனைவி இறந்துவிட்டாராம். போதாக்குறைக்கு தொழில் நஷ்டமும் சேர்ந்து கொண்டதால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு மூக்குபொடி சித்தர் கோயிலே கதி என்று வாழ்ந்து வந்துள்ளார்.

சொந்த விரக்தியில் உள்ளவரின் தோற்றத்தை பார்த்து, செந்தில்குமார் கேலி செய்து கொண்டேயிருப்பாராம்.. இது கமல் உஸ்மானை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளது..
கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம். மனைவி குழந்தைகள் உள்ள நிலையில், வேலைக்காக சென்னையில் வந்து ரூம் எடுத்து தங்கி வந்துள்ளார். ஆனால், வேலைக்கும் சரியாக போகாமல், பெண்களுடன் தினமும் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.
விசாரணை: இதை பலமுறை கமல் உஸ்மான் கண்டித்த நிலையில், மனிதனாக வாழவே தகுதி கிடையாது என்று சொல்லி, குத்தி கொன்றாம் கமல் உஸ்மான். இப்போதைக்கு இவரை கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள் என்றாலும் தொடர்விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications