Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோழிங்கநல்லூருக்கு நற்செய்தி.. துள்ளும் பெருங்குடி.. சூப்பராக மாறும் ஓஎம்ஆர் ரோடு.. 4 பாலங்கள்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் பல்வேறு சாலைப்பணிகள் நடந்து வரும்நிலையில், தற்போது, இன்னொரு இன்ப அதிர்ச்சி வெளியாகி உள்ளது.

நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பெருகிவரும் நிலையில், இவைகளை சமாளிக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Chennai Tidel Park and Sholinganallur metro rail with 4 new bridges with Rs 459 crore

வண்டலூர்: அதன்படி, வண்டலூர் ரோட்டில் சாலைகள் அமைக்கும் பணி சீர்படுத்தப்பட்டது.. புறநகர் பகுதியான வண்டலூர் மற்றும் மீஞ்சூர் இடையே 62 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெளிவட்ட சாலையும் ஏற்கனவே, அமைக்கப்பட்டுள்ளது.. 400 அடி அகலமுள்ள இந்த சாலையில், ரயில் பாதை அமைப்பதற்காக 72 அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது..

இதைத்தவிர, 164 அடி எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 164 அடி அகல பகுதியை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை கொண்டு வரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. அதன்படி, புதிதாக டைடல் பார்க் அமைக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதன் மூலம் அந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பழைய மகாபலிபுரம்: இப்படிப்பட்ட சூழலில், ராஜீவ்காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் சாலையில், டைடல் பார்க் மற்றும் சோழிங்கநல்லூர் இடையேயுள்ள நான்கு சந்திப்புகளிலும், ரூ.459.32 கோடியில் புதிய பாலங்கள் கட்டும் பணி ஆரம்பமாகி உள்ளன.. மெட்ரோ ரயில் நிறுவனமும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்த பணியை ஆரம்பித்திருக்கின்றன.

காரணம், இந்த ராஜீவ்காந்தி சாலையில்தான், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி போன்றவை அனைத்துமே வர்த்தக பகுதிகளாகிவிட்டன.. இதன்காரணமாகவும், ஏராளமான குடியிருப்புவாசிகளும் இங்கு வந்துவிட்டதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடுகிறது.. போதாக்குறைக்கு, மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான மெட்ரோ ரயில் -3 வது வழித்தடப் பணி நடந்து வருவதால், தடுப்புகள் போடப்பட்டு, சாலை மிகவும் குறுகலாகிவிட்டது.

டைடல் பார்க்: ஏற்கனவே, டைடல் பார்க் - திருவான்மியூர் சாலை சந்திப்பு பகுதிகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடியை குறைப்பதற்காக, 2 பாலங்கள் கட்டும் பணிகள் நடந்துவரும்நிலையில், சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை தடுக்கவும் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

எனினும், டைடல்பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஏற்படும், டிராபிக்குகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருவதால், சோழிங்கநல்லூர் சந்திப்பு பகுதியிலும் பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஆக, இந்த 4 சந்திப்புகளிலுமே, 4 புதிய பாலங்கள் கட்ட தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறதாம்.. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை இணைந்து, ரூ.459.32 கோடி மதிப்பில் திட்டங்கள் போடப்பட்டுள்ளன..

Chennai Tidel Park and Sholinganallur metro rail with 4 new bridges with Rs 459 crore

ஜரூர் பணிகள்: அதன்படி, மெட்ரோ ரயில் பாதைக்காக தூண்கள் அமைக்கும்போதே, பாலத்துக்கான தூண்களையும் சேர்த்து அமைத்து, 2 பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். சூட்டோடு சூடாக, இப்போதே 4 பாலங்களிலும் ஆரம்ப பணிகளும் ஆரம்பமாகிவிட்டன.

அதேபோல, இந்த சந்திப்புகளில் 2 அடுக்கு பாலம் அமையும், முதல் அடுக்கு மேம்பாலத்தில் வாகனங்களும், 2-ம் அடுக்கில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பாலமும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கூடிய சீக்கிரம், தரமணி - எஸ்ஆர்பி டூல்ஸ் ஜங்ஷன், எம்ஜிஆர் சாலை- பெருங்குடி ஜங்ஷன், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஜங்ஷன், சோழிங்கநல்லூர் ஜங்ஷன் பகுதிகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறையும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+