அரக்கோணத்தில் விழுந்த இடி.. சென்னை சென்ட்ரலில் 94 மின்சார ரயில்கள் ஒரேடியாக ரத்து.. அதிர்ந்த பயணிகள்
சென்னை: சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று இரவு 10 ரயில்களும், நாளை இரவு 84 ரயில்களும் என மொத்தமாக 94 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை-அரக்கோணம் காணம் மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை நவம்பர் 19 காலை 10 மணி வரை என 12 மணி நேரம் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது.

சிறப்பு ரயில்கள்: அதேபோல, 10 மின்சார ரயில்கள் சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில்கள் ரத்து: இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம்: இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரயில்கள் ரத்து.
ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது" என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
ஆக இன்று இரவு 10 ரயில்களும், நாளை 84 ரெயில்களும் என மொத்தமாக 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications