மெட்ரோவில் போன் எடுத்துக்கிட்டு போறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இந்த செய்தி.. மெகா அறிவிப்பு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை மெட்ரோவில் அதிரடி மாற்றங்கள் பல செய்யப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் ஒரு பக்கம் நடக்கிறது. இன்னொரு பக்கம் தற்போது உள்ள முதல் கட்ட சேவையிலேயே பல புதிய வசதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மெட்ரோவில் ஓட்டுநர் இல்லா ரயில்களின் முதல் சேவை 2026 இல் தொடங்கப்படும். தொடக்கத்தில், இந்த ரயில்களில் ரோவிங் உதவியாளர்களை வைத்திருக்க CMRL திட்டமிட்டுள்ளது. அதாவது கண்காணிப்பாளர்கள் உதவியுடன் டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ இயங்கும்.
இவர்கள் டிரைவர் இல்லாத மெட்ரோ சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பார்கள். CMRL அதிகாரிகளின் அறிவிப்பின்படி, 138 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்கள் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.
மெட்ரோ ரயில்கள் எப்படி இயங்கும்? இந்த ரயில்கள் மூன்று வழித்தடங்களுக்கு மூன்று ஒப்பந்தங்களில் வாங்கப்படும். மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த ரயில்கள் வாங்கப்படும்.
ஆட்டோமெட்டிக் ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில்களுக்கான டிசைனிங் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் செய்யப்படும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும், என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இன்னொரு வசதி: இந்த நிலையில்தான் பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது மெட்ரோவில் சார்ஜ் செய்யும் வசதி இல்லை. ஆனால் விரைவில் மெட்ரோவில் சார்ஜ் போடும் வசதி கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரைவர் இல்லாத மெட்ரோ தொடங்கியவுடன் சென்னையில் உள்ள மெட்ரோக்களில் போன் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து எப்போது தொடங்கும்: இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பணிகள் எல்லாம் முடிந்து ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications