சென்னை டூ துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிப் போன 278 பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது. சென்னையில் இருந்து 278 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து துபாய்க்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா, இண்டிகோ, எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் துபாய்க்கு விமானங்கள் இயக்கி வருகின்றன.

வணிக நோக்கிலும், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து துபாய்க்கும் துபாயில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து வருகிறார்கள். எப்போதும் பிசியாக இருக்க கூடிய விமான ரூட்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்த நிலையில்தான், இன்று சென்னையில் இருந்து 278 பயணிகளுடன் துபாய்க்க்கு எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது நடுவானில் கண்டறிய்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நடுவானில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து பயணிகள் பீதி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திலும் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சமீப காலமாக விமானங்களில் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் நிகழ்வுகள் விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications