அதலபாதாளத்தில் நடக்கும்.. பெரிய பொறியியல் அதிசயம்.. சென்னையிலேயே இதுதான் மிக அதிக ஆழம்.. அதிருதே!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், திருமயிலை நிலையம் நகரின் மிக ஆழமான சுரங்க ரயில் நிலையமாக உருவாகி வருகிறது. தெரு மட்டத்திலிருந்து சுமார் 38.79 மீட்டர் ஆழத்தில் அமையவுள்ள இது, 2028-ஆம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்த நிலையம் பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலான அமைப்பாகும். Corridor 3 மற்றும் Corridor 4 வழித்தடங்கள் நிலத்தடியில் ஒன்றையொன்று குறுக்கிடும். குறுகிய கச்சேரி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலைகளில் நிலம் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ
திருமயிலை நிலையத்தில் பெரிய இணைப்பு மையம் (concourse) மற்றும் மூன்று தளங்கள் (platforms) என நான்கு நிலத்தடி தளங்கள் இருக்கும். Corridor 3 மிகக் கீழ்ப்பகுதியிலும், Corridor 4 அதற்கு மேலும் கீழும் செங்குத்து அடுக்குகளாகச் செல்லும்.
Phase-II-ன் முக்கிய சந்திப்பு நிலையமான திருமயிலை, மாதவரம்-சிப்காட் மற்றும் பூந்தமல்லி-லைட் ஹவுஸ் ஆகிய இரு வழித்தடங்களை இணைக்கிறது. புவியியல் நிலைமைகள், சாலை அகலம் போன்ற சவால்கள் காரணமாக, இதை அமைப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு மூன்று தளங்கள் அமையவுள்ளன. மாதவரம்-சிப்காட் ரயில்கள் முதல் (17 மீ கீழ்) மற்றும் மூன்றாவது தளத்திலும் (35 மீ கீழ்) இயங்கும். பூந்தமல்லி-லைட் ஹவுஸ் ரயில்கள் இரண்டாவது தளத்தில் (24 மீ கீழ்) இயக்கப்படும்.
மெட்ரோ பணிகள் தீவிரம்
நில ஆய்வில், திருமயிலையில் பாறைகள், பாறை மண் கண்டறியப்பட்டுள்ளது. "நிலையப் பெட்டி அல்லது தடுப்புச் சுவர் (diaphragm wall) கட்டமைப்பதற்கும், சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கும் இது கடினமாக இருக்கும்" என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
₹61,843 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் தரமணி வரையிலான பல இடங்களில் தடுப்புச் சுவர் பணிகள் நடைபெறுகின்றன. 6-8 மாதங்களில் நிறைவடையவுள்ள இப் பணிகளை அடுத்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுரங்கப் பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் தயாராகி வருகிறது.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான (TBM) விவரக்குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், ஒப்புதல் பெற்று தொழிற்சாலை பரிசோதனைக்குப் பின் அவை நகரத்திற்கு வரும். இரண்டாம் கட்டத்திற்காக மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications