Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடுக்கு குட்நியூஸ்.. வெறும் 20 நிமிடத்தில் சென்னை மதுரவாயல் டூ துறைமுகம்.. எப்போது சாத்தியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையேயான மேம்பால பணிகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. ஒருவேளை அந்த பாலம் 2010ம் ஆண்டு இருந்த வேகத்தில் நடந்திருந்தால்,இந்நேரம் சென்னை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருக்கும். புதிய விரைவு சாலையும் சென்னை நகருக்குள் கிடைத்திருக்கும்.. இந்நிலையில் அந்த சாலை குறித்து முக்கியமான தகவலை சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை 21 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் மூலம் அமைக்க கடந்த 2009ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இது சென்னைத் துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும் பின்னர்,அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் வரை உயர்மட்ட பாலத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

Chennai to Maduravoyal to Port in just 20 minutes Good news about the project that came to life

20 நிமிடங்கள் போதும்

இச்சாலைத் திட்டம் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு துவக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இத்திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல அப்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் மதுரவாயலில் இருந்து துறைமுகம் வருவதற்கு வெறும் 20 நிமிடங்கள் போதும் என்கிற நிலை இருந்தது.

15 சதவீத பணி

கனரக வாகனங்கள் இந்த உயர்மட்ட சாலையில் வரும் என்பதால் சென்னை நகருக்குள்ளும் போக்குவரத்து கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இச்சாலை கட்டுமானப்பணிகள் 15 விழுக்காடு முடிந்திருந்த நிலையில் 2011-ம் ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.நீர்வழிப்பாதையில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது. அதன்பிறகு திட்டம் அப்படியே நின்றது. தற்போது அந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

எம்.எல்.ஏ. ஈஸ்வரன்

இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான மேம்பால பணிகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.எல்.ஏ. ஈஸ்வரன் கொண்டு வந்தார். அவர், மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த போது 16 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட பாலம் அது. பொருளாதார முன்னேற்றத்திற்கு அது உறுதுணையாக இருக்கும். அந்தப் பாலத்தை கட்டி முடித்த பின்னர் அதற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எவ வேலு விளக்கம்

அதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து அந்தப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்தப் பாலத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்று பிரதமரிடத்திலும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடமும் நேரடியாக கடிதம் கொடுத்து வலியுறுத்திய பிறகு, அதை மீண்டும் கட்ட வாய்ப்பு கிடைத்தது.

மும்பை நிறுவனம்

அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.3,570 கோடி. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்து அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர்மட்ட சாலை மொத்தம் 21 கி.மீ. நீளமுள்ளது. அது இரண்டு பகுதியாக அமைகிறது. மேல் பகுதி, மதுரவாயிலில் இருந்து புறப்பட்டு நேரடியாக துறைமுகத்திற்கு வந்துவிடும். கீழ்ப் பாலம், 6 இடங்களில் இறங்கு பாலங்களாகவும், 7 இடங்களில் ஏறு பாலங்களாகவும் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அந்தப் பாலம் அமைக்கப்படுவதால், பல்வேறு இனங்களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

கூவம் ஆறு

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அங்குள்ள சில இடர்பாடுகளை சொன்னார்கள். கூவம் ஆற்றில் 15 கி.மீ. தூரம் வரை அந்தப் பாலம் செல்கிறது.அதற்கு நீர்வளத் துறையிடமிருந்து அனுமதி பெறவேண்டும். அதற்கு தடையற்ற சான்றிதழ் வாங்கி, அந்தப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூவம் ஆற்றங்கரையில் இருக்கும் பொதுமக்களுக்கு வேறொரு இடத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு குடியிருப்பு ஏற்படுத்தித் தரவேண்டிய பணிகள் செய்யப்பட உள்ளன.

அரசு இடங்கள்

சாலைக்காக கூவம் பகுதியில் விரிவாக்கம் செய்யும்போது, மின்கம்பங்களை அகற்றும் பணி, கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக இருக்கிற போக்குவரத்துகளை மாற்றியமைப்பது, இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான, கடற்பகுதிக்குச் சொந்தமான இடத்திற்குப் பதிலாக மாநில இடத்திற்குச் சொந்தமான வேறொரு இடத்தைக் கொடுத்துவிட்டு, அந்த இடத்தை இதற்காகப் பெறுவது என்று பல்வேறு வகையிலான பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதற்கு 20.5.2026 வரை ஒப்பந்தம் இருக்கிறது. அந்தப் பணிகளை முடிப்பதற்கும், அந்தப் பாலத்தை விரைவாக கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை நிச்சயம் முழு ஒத்துழைப்பை வழங்கும்.

துறைமுகம்

தமிழ்நாட்டிலே தொழில் வளர்ச்சி பெருக வேண்டுமென்ற அடிப்படையில்தான் வெளிநாட்டு மூலதனங்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டிருக்கிறார். தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிற அந்தப் பொருட்களெல்லாம் இங்கே துறைமுகத்திற்கு வரவேண்டும் என்ற அடிப்படையில்தான் அந்தச் சாலைக்கு முக்கியத்துவம் தந்து, அந்தப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பாலம் அமைப்பதற்கு அரசு அத்தனை முயற்சியையும் எடுக்கும்" இவ்வாறு எவ வேலு விளக்கம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+