டூ மச்.. துக்க வீட்டிலேயே திருட்டா? தலைசுற்றும் ஒடிசா விமான டிக்கெட் -கொந்தளித்த திமுக ராஜீவ் காந்தி
சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண பல மாநிலங்களில் இருந்தும் புவனேஷ்வருக்கு விமானங்களில் மக்கள் சென்று வரும் நிலையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக திமுகவின் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்றுகொண்டு இருந்த கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூருவில் இருந்து ஹவ்ரா நோக்கி சென்ற யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

வெள்ளிக்கிழமை இரவு 7 - 8 மணிக்கு இடையே இந்த ரயில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பயணிகள் பயணித்து உள்ளார்கள். ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 290 ஐ தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் பயணித்து உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் தனித்தனியாக ரத்த வெள்ளத்தில் தண்டவாளங்களில் இருப்பதாகவும் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை பயணித்த பயணிகள் தெரிவித்து உள்ளன.
இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அரசு உதவியுடன் 50 க்கும் அதிகமானோர் விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.
இதுவரை தமிழர்கள் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரம் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. ரயிலில் பயணித்த 8 தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் இறந்த சிலரது உடல்களும் அடையாளம் காணப்படவில்லை.

எனவே ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு ஒடிசாவுக்கு வந்து உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஒடிசா தலைநகர் புவனேஷ்வருக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் சென்னை - புவனேஷ்வர் இடையிலான விமான டிக்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, "துக்க வீட்டில் திருடும் பாஜக கும்பல்! இறந்தவர்களை துக்கம் விசாரிக்க ஒரிசா போகிறவர்களுக்கு. 5000 ரூ இருக்கும் விமான கட்டணம் 60000 ரூ! இது சாவு வீட்டில் களவாடும் வேலை!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications