சென்னையில் திருமணம் செய்கிறீர்களா? சொந்தமாக நிறுவனம் நடத்துறீங்களா? வந்த ஷாக் உத்தரவு.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருமண விளம்பரங்கள், சாலைகளில் வைக்கப்படும் நிறுவன விளம்பரங்கள்.. அனுமதி இன்றி வைக்கப்பட்டால் அதை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது. சோழிங்கநல்லூர் மண்டலம், குமரன் நகர் தெருவில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது.

ias m k stalin

இதன் தொடர்ச்சியாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது.

சுத்தப்படுத்தும் பணி: இது போக கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) ஜூலை 29 முதல் அதன் அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. ஜூலை 29.. அதாவது இன்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

மேலும், கண்ணப்பர் திடலில் ₹6.20 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானம் மற்றும் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை திரு.குமரகுருபரன் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை தயார்நிலை - மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.

குமரகுருபரன் ஐஏஎஸ்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார். நாய்க்கடி விவகாரம் மற்றும் சென்னையில் மாடுகள் தொல்லை விவகாரத்தில் இவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது.

முக்கியமான சென்னை நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் உலா வரும் விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்குவெறிநாய் தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+