சென்னைக்குள் என்ட்ரி ஆக முடியவில்லை.. ஜிஎஸ்டி சாலையில் கடும் ‘டிராபிக்’.. 2 கிமீ நிற்கும் வாகனங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து விட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இன்று சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை சிங்கபெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலை உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி (வியாழன்)நடந்து முடிந்தது. தேர்தலையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தனர். அதன்பிறகு வெள்ளி, சனி மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை சொந்த ஊரில் இருந்த மக்கள் மீண்டும் சென்னை புறப்படடுள்ளனர்.
இன்று மதியமே பலரும் கார், பஸ்களில் சென்னை புறப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் சென்னை புறப்பட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் சிங்கபெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கினறன. இப்போது இரவாகியும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அதேபோல் சென்னை திரும்புவதற்காக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை மாவட்ட பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். எஸ்இடிசி, தனியார் பஸ்கள் தவிர சென்னை செல்லும் சாதாரண அரசு பஸ்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணித்து வருகின்றனர்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications