வாகன ஓட்டிகளுக்கு ஸ்வீட் நியூஸ் வருது.. இனி 40 கி.மீ வேகம் கிடையாதாமே.. சென்னையில் சும்மா பறக்கலாம்
சென்னை: வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம், தற்சமயம் 40 கிலோ மீட்டராக உள்ள நிலையில், இப்போது அடுத்த அதிரடி வெளியாக போகிறதாம்.. இதைக்கேட்டு வாகன ஓட்டிகள் திக்குமுக்காடிப்போயுள்ளனர்.
விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னைபோக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகபோக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கள்: இதற்காகவே, சென்னையில் விபத்துக்களை தடுப்பதற்காக, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, அதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையிலும் விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அதற்கான ரசீது சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் சென்னை போலீசார், வாகன ஓட்டிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி, சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.
கண்காணிப்பு கருவி: வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனையடுத்து விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு அவசியம் என்றும் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு சென்னையில் 10 இடங்களில் அமல்படுத்தப்படும், சென்னை - பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை கடந்து சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்..
போக்குவரத்து துறையின் இந்த முயற்சி காரணமாக, கடந்த வருடம் 573க இருந்த சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 508 ஆக குறைந்துள்ளது.
உயிரிழப்புகள்: எனினும், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 241 உயிரிழப்புக்கள் பதிவாகியிருக்கின்றன.. இந்த உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும் என்பதில், போக்குவரத்து துறை அடுத்தடுத்த ஆலோசனைகளில் இறங்கி உள்ளது. அந்தவகையில், சென்னையில் வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 40-லிருந்து 60 கி.மீட்டராக உயர்த்த சென்னை போக்குவரத்து போலீஸார் ஐஐடி உட்பட துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..

இப்போதைக்கு, சென்னையில் வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் 40 கி.மீட்டராக உள்ள நிலையில், இந்த வேகத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்திருந்தனர்.. ஆனாலும், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து 40 கிமீ வேகம் என்பதை மேலும் எத்தனை கிமீ வேகமாக உயர்த்தலாம் என்று போக்குவரத்து போலீஸார் ஐஐடி மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்களாம்.
விரைவில் அதிரடி: அதன்படி, 60 கி.மீ. வேகமாக உயர்த்தி நிர்ணயிக்கலாம் என்ற முடிவுக்கு போக்குவரத்து போலீஸார் வந்துள்ளதாக தெரிகிறது.. இந்த பரிந்துரையை தமிழக அரசுக்கு போக்குவரத்து போலீஸார் விரைவில் அனுப்பி வைக்க உள்ளனர்.. அதற்கு பிறகே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இது வாகன ஓட்டிகளுக்க மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications