சென்னையில் இப்படியுமா டிராபிக் போலீஸ் இருப்பாங்க.. குடும்பத்தையே ஆனந்த கண்ணீர் விட வைத்த பெருமாள் சார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, தியாகராய நகரில் சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்து போக்குவரத்து போலீசார் செய்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இப்படியுமா போலீஸ்காரர்கள் இருப்பார்கள் என்று கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னையில் சிசிடிவி கேமராக்கள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கின்றன என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். திருடர்கள் யாருமே ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.எங்கே சென்றாலும் ஷார்ட் ரூட்டில் போலீசார் தூக்கிவிடுவார்கள். சென்னையில் எல்லா சாலை சந்திப்புகளிலும் அதிநவீன சிசிடிவி கேமராக்களை போலீசார் பொறுத்தி உள்ளனர். இந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றங்களை கண்டுபிடிக்க தனி டீமே காவல்துறையில் இருக்கிறது.

Chennai traffic policeman great help to family, who missed 7 Savaran jewels in Thiagaraya Nagar

சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது தெரிந்தால், அல்லது அவர்களின் செயல்பாடுகள் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே பிடித்துவிடுவார்கள். இதுமட்டுமல்ல, சென்னை பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து இடம் நேரம் மற்றும் குறிப்பிட்டால் போதும்,சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அபராதமும் விதிக்கிறார்கள் சென்னை போலீசார்.

விபத்துகள் எப்படி நடக்கின்றன என்பதையும், திருடர்கள் எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்தையும் சிசிடிவில் பார்த்து கண்டுபிடிக்கும் போலீசார் இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள். சென்னையில் போலீசார் மட்டும் சரியான முறையில் ஒரு நாள் போக்குவரத்தை கண்காணிக்காமல் விட்டால், மொத்த சென்னையிலும் மிகப்பெரிய போக்குவரத்து குழப்பமே ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு அவர்களின் பணி இன்றியமையாதது.

சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்யும் போது, கடுப்பாகி அவர்களை திட்டியவர்களா நீங்கள், இதே இந்த செயலை கேட்டால் அவர்களை நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள்.

சென்னை தியாகராய நகரில் பலரும் வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி செல்வார்கள்.எப்போது தியாகராயநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். சென்னையில் அங்காடி தெரு என்றால் அது தியாகராய நகர் தான். இந்நிலையில் சென்னை, தியாகராய நகரில் குமரன் என்பவர் குடும்பத்துடன் பொருட்கள் வாங்க வந்துள்ளார். ஆனால் வந்த இடத்தில் நகைப்பையை தவறவிட்டுச் சென்றுள்ளார். இதை கவனித்த ஒரு பெண், அதை பத்திரமாக போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.

குமரன் குடும்பத்தினர் மீண்டும் அப்பகுதியில் நகையை தேடி அலைந்ததை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார், அவரிடம் நகையை ஒப்படைத்தனர். போலீசாரிடம் புகார் ஏதும் கொடுக்காதபோதும், ஒரு மணி நேரத்திலேயே சிசிடிவி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

7 சவரன் நகையை ஒரு மணி நேரத்தில், சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்து, உரிமையாளரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலர் பெருமாளை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+