சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மரணம்.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்.. யார் இந்த புல்லட் குமரன்?
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், பிரபல ரவுடியுமான புல்லட் குமரன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
2015ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியைச் சேர்ந்த மார்க்கெட் முரளியை கொலை செய்த வழக்கில் புல்லட் குமரன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். பின்னர் அதிமுக பிரமுகரின் ஆதரவுடன் அப்பகுதியில் அரசியல் பிரமுகராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் புல்லட் குமரன். இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. மார்க்கெட் முரளி என அழைக்கப்பட்டு வந்தார். போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அயோத்திக்குப்பம் வீரமணியின் கூட்டாளியான மார்க்கெட் முரளியின் மீது சில கொலை வழக்குகள் இருந்தன.
பின்னர் ரவுடியிச வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த மார்க்கெட் முரளி, ஜாம்பஜார் மார்க்கெட்டில் நான்கு கோழிக்கறி கடைகள், காய்கறி கடைகள், 20 கார்களுடன் டிராவல்ஸ் மற்றும் கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தார். ஜாம்பஜார் பகுதியில் பெரிய தொழில் அதிபர் போல் வலம் வந்தார்.
மார்க்கெட் முரளிக்கும் அதே பகுதியில் உள்ள புலிபோன் பஜார் பகுதியை சேர்ந்த ரவுடி புல்லட் குமரன் என்பவருக்கும் கடந்த இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. எனினும் இருவரும் அவ்வப்போது நட்புடன் பேசி வந்தனர். இந்நிலையில் ஒரு ரவுடி கொலை விவகாரத்தில் கொல்லப்பட்ட ரவுடியின் மகன், புல்லட் குமரனுடன் சேர்ந்து மார்க்கெட் முரளியை கொலை செய்தார்.
கோவில் திருவிழா தொடர்பாக பேசுவதற்காக புல்லட் குமரன் வீட்டுக்குச் சென்ற மார்க்கெட் முரளி, திரும்பி வீட்டுக்கு வராத நிலையில், மார்க்கெட் முரளியின் குடும்பத்தினர் புல்லட் குமரனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. மாடி படிகளில் ரத்தக்கறைகள் படிந்து கிடந்தன.
வீட்டை உடைத்துப் பார்த்தபோது கழுத்து, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு மற்றும் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் கொடூரமான முறையில் முரளி கொல்லப்பட்டு கிடந்தார். புல்லட் குமரன் மற்றும் அவரது நான்கு மகன்கள், இன்னொரு ரவுடியுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியதாக கூறப்பட்டது.
அதன்பிறகு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் புல்லட் குமரன். பின்னர் அதிமுகவில் முக்கிய பிரமுகராக அப்பகுதியில் வலம் வந்தார் புல்லட் குமரன். இந்நிலையில், நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 53. அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications