சென்னை வடபழனி மசாஜ் சென்டருக்குள்.. திடீர்னு நுழைஞ்சிட்டாரே.. யாருன்னு பாருங்க? அதிர்ந்து போன போலீஸ்
சென்னை: அனுமதி பெறாமல் இயங்கிவரும், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வரும்நிலையில், ஒரு காக்கியே சிக்கி உள்ளார். என்ன நடந்தது வடபழனியில்?
தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..

அதன்படியே, கஞ்சா விற்பனை உட்பட, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது..
மசாஜ் சென்டர்: சென்னை மாநகரில் மட்டுமே, சட்டவிரோதமாக ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பலமுறை புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. எனவே அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்களில் போலீசாரின் நடவடிக்கைகள் தற்போது தீவிரம் எடுத்துள்ளன.
இந்நிலையில், சென்னை வடபழனி உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி, வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில், யாரோ ஒரு போலீஸ்காரர், அடிக்கடி வந்து மிரட்டி பணம் பறித்து செல்வதாக கூறப்பட்டது.
கண்காணிப்பு: இதனையடுத்து வடபழனி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.. மேலும், லஞ்சம் வாங்கும் அந்த போலீஸ்காரரை, கையும் களவுமாக பிடித்துவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வந்தனர்.
எதிர்பார்த்தபடியே, இன்று வடபழனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு, அந்த போலீஸ்காரர் சென்றுள்ளார்.. யூனிபார்மில்தான் சென்றிருக்கிறார்.. அங்கிருக்கும் மசாஜ் சென்டர்களில் வழக்கம்போல், பணமும் கேட்டு மிரட்டியுள்ளார்.. இதுகுறித்து போலீசாருக்கு மெசேஜ் பறந்ததுமே, தனிப்படை போலீஸார் விரைந்து வந்துவிட்டனர்.. அந்த போலீஸ்கார நபரையும் சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர். பிறகு, அந்த காக்கி நபரை, வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்று விசாரித்தனர்.
டிராபிக் வார்டன்: அந்த நபர், நிஜமான போலீஸ்காரர் கிடையாதாம்.. பெயர் அஸ்வின்.. 30 வயதாகிறது.. ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர்.. 4 வருடங்களுக்கு முன்பு டிராபிக் வார்டனாக வேலைபார்த்திருக்கிறார். அதற்கு பிறகு, வேறு எங்குமே வேலைக்கு போகவில்லை.
காக்கி டிரஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, பைக்கில் "போலீஸ்" என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, ஒவ்வொரு மசாஜ் சென்டருக்கும் சென்று மாமூல் வாங்கி வருவாராம்.. இந்த மாமூல் பணத்தில், ருசி பார்த்துவிட்டதால், இதே ஐடியாவை அடிக்கடி பயன்படுத்தி, பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி போலீஸ்: இப்போது, அஸ்வினிடமிருந்து காவல் உதவி ஆய்வாளர் வாடகை டிரஸ், பைக், போலி அடையாள அட்டை போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
வடபழனி போன்ற பிஸியான, அதுவும் மக்கள் நடமாட்டமுள்ள இடத்திலேயே, சப் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் மாமூல் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவருகிறது. இந்த டுபாக்கூர் போலீஸிடம், விசாரணை தீவிரமாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications