சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 250 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. அமைச்சர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில் யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தடைப்பட்டிருந்த இந்த இடமானது முழுக்க ஏழை எளியவர்கள் பயன்படும் வகையில் சமுதாய நோக்கத்தோடு இந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

'தொடங்கியது'.. டிஜிட்டல் வடிவில் கோவில் ஆவணங்கள்! சொன்னபடி செய்த அமைச்சர் சேகர் பாபு! 'தொடங்கியது'.. டிஜிட்டல் வடிவில் கோவில் ஆவணங்கள்! சொன்னபடி செய்த அமைச்சர் சேகர் பாபு!

பொருளாதாரம்

பொருளாதாரம்


வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுத்துவதற்கான திட்டம் நிச்சயமாக இந்த இடத்தில் செயல்படுத்த முதல்வர் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.

100 நாட்கள்

100 நாட்கள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம். இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம். தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறது.

கோயில்கள்

கோயில்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யாத கோயில்கள் கண்காணிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்பு

ஆட்சி பொறுப்பேற்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அது போல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது கருணாநிதியின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Sekar Babu says that Chennai Vadapalani temple encroachment assets worth Rs 250 crore seized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X