சென்னையில் "இடி".. வளசரவாக்கத்தில் விபச்சாரத்தில் டாப் நடிகைகள்.. சிக்கிய வைதேகி.. அந்த "விஐபி"யுமா?
சென்னை: பாலியல் தொழிலில் சில நடிகைகள் சிக்கி உள்ளார்கள்.. இவர்களுடன் தொடர்பில் இருந்த, சில முக்கிய புள்ளிகளும் சிக்க உள்ளார்கள்.. என்ன நடக்கிறது, நம்முடைய தலைநகர் சென்னையில்?
பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.
அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்று செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் நம்முடைய போலீசார் இறங்கி வருகிறார்கள்..

ஆடம்பர வாழ்க்கை: ஆனாலும், ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள். சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய முன்வருகின்றனர்... அப்படித்தான் மும்பையில் ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது..
தமிழ் நடிகைகள்: உடனே போலீசாரும் பங்களாவில் நுழைந்து அங்கிருந்த பெண்களை கைது செய்தனர். அதில் நம்முடைய தமிழ் நடிகைகள் 2 பேரும் இருந்திருக்கிறார்கள்.. இவர்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஹீரோயின்களாகவும் இருந்தவர்களாம். தற்சமயம் மார்க்கெட் இல்லை என்பதாலும், காசு இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டதால் விபச்சாரத்திற்கு வந்துவிட்டதாக 2 பேரும் போலீசில் அழுது புலம்பி உள்ளனர்.. எனினும், அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்..
இதோ இப்போதும் ஒரு துணை நடிகை சிக்கி உள்ளார்.. சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ளது அந்த அபார்ட்மென்ட்.. இந்த அப்பார்ட்மென்ட் வீட்டுக்கு, அறிமுகம் இல்லாதவர்கள் அடிக்கடி வந்து செல்வதை அந்த பகுதி மக்கள் கவனித்துள்ளனர்..
குடியிருப்புவாசிகள்: இதை விபசார தடுப்பு பிரிவுக்கும் புகாராக தந்திருக்கிறார்கள். இதையடுத்து, போலீசாரும் அந்த அப்பார்ட்மென்ட் பகுதிக்குள் நுழைந்தனர்.. அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளிடம் விசாரித்ததில், சில தகவல்களையும் பெற்றனர்..
நிறைய சினிமா நடிகைகளை வைத்து இந்த விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.. படவாய்ப்பு இல்லாததால், இந்த நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. இப்படி விபச்சாரத்தில் அவர்களை ஈடுபடுத்தியதும், ஒரு பிரபல துணை நடிகைதான் என்பது தெரியவந்தது.. அவர் பெயர் வைதேகி.. 50 வயதாகிறதாம்.. இவருக்கும் மார்க்கெட் இல்லை என்பதால், சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் கடந்த 6 வருடங்களாக செய்துவருகிறாராம்.
நடிகை வைதேகி: இவ்வளவு தகவல்களை திரட்டியபிறகும்கூட, போலீஸ்காரர் அந்த அப்பார்ட்மென்ட் வீட்டுக்குள் நுழையவில்லை.. ஒரு நபரை, கஸ்டமர் போல, அந்த நடிகை வைதேகியுடன் பேச வைத்திருக்கிறார்கள்.
அதற்கு அவர், "முன்னணி நடிகைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 ஆயிரம், துணை நடிகைகளுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும்... முன்னணி நடிகை தான் வேண்டும் என்றால், ஒரு நாளுக்கு முன்பேயே ரிசர்வ் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டாராம்.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு, தன்னிடம், ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருக்கிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும்" என்று விலை பேசியிருக்கிறார்
துணை நடிகை: இதற்கு பேரம் பேசப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.8 ஆயிரம் என்று முடிவாகி, இறுதியில், துணை நடிகையை புக் செய்திருக்கிறார்கள்.. பிறகு, கஸ்டமர் போல போலீஸ்காரர் ஒருவரை, அந்த அப்பார்ட்மென்ட்டின் 2வது தளத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.. அவரை தொடர்ந்து பின்னாடியே, போலீசார் டீம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தது.. இதை பார்த்ததும் வைதேகி அதிர்ந்து போய்விட்டார்.. அங்கே ஒரு துணை நடிகையும் நின்றுகொண்டிருந்தார்.. அவருக்கு 30 வயதாகிறதாம்..
பாலியல் தொழிலில் கையும் களவுமாக இவர்கள் சிக்கி விட்ட நிலையில், நடிகை வைதேகியை போலீசார் கைது செய்தனர். பிறகு விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது வைதேகி போலீசாரிடம் சொன்னதாவது:
வாக்குமூலம்: "சினிமாவில் நடிக்க சான்ஸ் அவ்வளவாக கிடைக்கவில்லை.. அதனால், முன்னணி நடிகைகளை வைத்து, இந்த 6 ஆண்டுகளாக சென்னையில் பாலியல் தொழில் செய்து வருகிறேன்..

தொழிலதிபர்கள் முதல் இளைஞர்கள் வரை நடிகைகளின் அழகுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் செய்யப்படும்.. பாலியல் தொழிலுக்கென்றே வாட்ஸ்அப் க்ரூப்கள் உள்ளன.. அதில், இந்த நடிகைகளின் போட்டோக்கள் மற்றும் ரேட்களை அனுப்புவேன்.. கஸ்டமர்களும், தங்களுக்கு பிடித்த அல்லது பணத்தை நிர்ணயித்து எங்களிடம் தொடர்பு கொள்வார்கள். அவர்களுடன் நடிகைகளை அனுப்புவேன்" என்று போலீசில் சொன்னாராம் வைதேகி.
யார் அந்த விஐபிகள்: 6 ஆண்டுகளாகவே, முன்னணி நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதால், இவர்களுடன் தொடர்பில் இருந்த விஐபிகள், தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகள் யார் என்ற லிஸ்ட்களை நம்முடைய போலீசார் தயாரித்து வருகிறார்கள்.. இதனால் பல பேரின் முகத்திரை கிழிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது..!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications